இலங்கையில் வண்ணாத்துப் பூச்சிகளுக்கும் ஆபத்து
இலங்கையில் 99 வகையான வண்ணத்துப்பூச்சி இனங்கள் அழிவடையும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக உயிர் பல்வகைமை செயலகம் அறிவித்துள்ளது. இதில் இலங்கைக்கே உரித்தான 22 வண்ணத்துப்பூச்சி இனங்களும் அடங்குவதாக உயிர் பல்வகைமை செயலகத்தின் பணிப்பாளர் பத்மா அபேகோன் தெரிவித்துள்ளார்.
சூழல் மாசடைந்து வருவதும் வண்ணத்துப்பூச்சிகள் பெருகும் இடங்கள் அழிவடைந்துள்ளமையுமே இதற்கான காரணமாக கருதப்படுகின்றது.
விவசாய நடவடிக்கைகளின் போது மகரந்த சேர்க்கையில் வண்ணத்துப்பூச்சிகள் அளப்பரிய பங்களிப்பை ஆற்றிவருகின்ற போதிலும், இது குறித்த போதிய தெளிவில்லாதோர் சுற்றாடல் கட்டமைப்பை அழித்து வருவதாக பத்மா அபேகோன் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே, அழிவடையும் வண்ணத்துப்பூச்சி இனங்களை பாதுகாப்பதற்கான விசேட திட்டமொன்றை உயிர் பல்வகைமை செயலகம் தயாரித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் வண்ணத்துப்பூச்சிகளின் இன விருத்தி ஏற்படுகின்ற இடங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. Nf

Post a Comment