Header Ads



ஜெருசலத்திற்கு சுற்றுலா செல்லாதிர்கள் - ஹமாஸ் அறிவுரை



(Tn) அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளில் முன்னெடுக்கப்படும் இஸ்ரேலின் சுற்றுலாத் திட்டத்தை புறக்கணிக்குமாறு ஹமாஸ் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. யூத சுற்றுலா நிறுவனங்களால் ஏற்பாடு செய்யப்படும் ஆக்கிரமிப்பு ஜெருசலத்திற்கான சுற்றுலா பயணத்தையே பலஸ்தீனின் காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்பு புறக்கணிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த சுற்றுலா நிறுவனங்கள் கிழக்கு ஆசியா, ஆபிரிக்கா, இந்தியா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் தனது சுற்றுலா திட்டத்தை முன்னெடுத்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஹமாஸ் அமைப்பின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் கூறியிருப்பதாவது,

 “சியோனிச திட்டத்தின் தீவிரம் பற்றி நாம் எச்சரிக்கை விடுக்கிறோம். இதன்முலம் அல் அக்சா பள்ளிவாசல் மற்றும் அதன் எல்லை மீதான அரபு மற்றும் இஸ்லாமிய பாரம்பரியத்தை அழித்து யூத உரிமையை நிலைநிறுத்த சியோனிஸ்ட்கள் முயற்சிக்கின்றனர்” என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் இந்தத் திட்டம் குறித்து சர்வதேச இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (ஒ. ஐ. சி.) மற்றும் அரபு லீக் அமைப்புகள் தனது அங்கத்துவ நாடுகளுக்கு அறிவுத்தும்படியும் ஹமாஸ் அமைப்பு கோரியுள்ளது.

No comments

Powered by Blogger.