Header Ads



முன்பு 35.000 ஆயிரம் பேர் என்றிருந்த முஸ்லிம் சனத்தொகை தற்போது 20 இலட்சம்


1981ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரையில் மேற்கொள்ளப்பட்ட இலங்கையின் குடிசன மதிப்பீட்டில் பௌத்த மக்களின் குடிசன வளர்ச்சி 37% வீதமாகும். ஆனால் முஸ்லிம்கள் இதனைவிட இருமடங்கு, அதாவது 78 வீதம் வளர்ச்சியடைந்திருக்கிறார்கள் என்று தொழில்நுட்ப ஆய்வு மற்றும் அணுசக்தி அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க கூறினார்.

கொழும்பு 07 இல் அமைந்துள்ள சவ்சிறிபாய பிரதான மண்டபத்தில் நடைபெற்ற பௌத்த கலாசார புனரமைப்பு குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கையிலேயே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், முன்பு, முப்பத்தையாயிரம் பேர் என்ற அளவிலிருந்த முஸ்லிம் சனத்தொகை தற்போது, இருபது லட்சமாக உயர்ந்திருக்கிறது. இதே நிலை தொடருமானால், பௌத்த மக்கள் இரு மடங்காவதற்கு 140 வருடங்கள் எடுத்திருக்கும் நிலையில் அதே காலப் பிரிவில் முஸ்லிம்களின் இருபது லட்சமாக இருக்கும் முஸ்லிம்கள் பதினாறு மடங்காகப் பெருகி உச்ச நிலைக்கு வந்துவிடும்.

ஒரு குடும்பத்திற்கு 2.1 என்ற வீதத்திலேயே குழந்தைகள் இருக்க வேண்டும் என்றதொரு நியதி உலகில் இருந்து வருகிறது. அவ்வாறு அமையப் பெறாவிட்டால், அந்த கலாசாரம் அதே பரம்பரையை முன்னுக்கு கொண்டு வராது தவிர்த்து விடும்.

இன்று எமது பௌத்த மக்கள் மத்தியில் குடிசன வளர்ச்சி 1.7 வீதமே காணப்படுகின்றது. இது பாரதூரமான விளைவாகும். அதேபோன்று 15 வயதுக்குக் குறைந்த பிள்ளைகளது வளர்ச்சி வீதத்திலும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. குடிசன மதிப்பீட்டுத் திணைக்களம் இதுவரையும் அறிக்கை சமர்ப்பிக்கவில்லை. நாம் பொதுவாக பத்து வருடங்களுக்கு ஒரு முறையே குடிசன மதிப்பீடு செய்கிறோம். இம்முறை 2012 ஆம் ஆண்டு மதிப்பீடு செய்யப்பட்ட போதும் இதுவரை மதிப்பீடு அறிக்கையை விபரமாகத் தருவதற்கு குடிசன மதிப்பீட்டுத் திணைக்களம் தவறிவிட்டது. தொழில்நுட்ப சாதனங்கள் உள்ள தற்போதைய நிலையில் முறையான அறிக்கையைச் சமர்ப்பிப்பதிலுள்ள தாமதம் குறித்து எனது கவலையைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோன்றே பௌத்தர்களுக்கு இன்று வெளிநாடுகளில் பலமான அழுத்தங்கள் வந்து கொண்டிருக்கின்றன. உல்லாசப் பயண வீசாபெற்று இந்நாட்டுக்கு வரும் பெரும்பாலானோர் இங்கு தங்கியிருக்கிறார்கள்.

மாலைதீவு மாணவர்களுக்கு இங்கு கல்வி பெற வீசா வழங்கப்படுகிறது. அத்துடன் அவர்களது பெற்றோருக்கும் இங்கு வருவதற்கு அனுமதி கொடுக்கப்படுகிறது. ஆனால் இவ்வாறு இங்கு வருவோரில் எத்தனை பேர் கல்வியை முடித்துக் கொண்டு மீண்டும் மாலைதீவுக்குச் சென் றிருக்கிறார்கள் என்பது குறித்து தேடிப்பார்க்க வேண்டும்.

இந்தியாவின் ஒரு மாநிலத்திலிருந்து எமது நாட்டுக்கு பலமான அழுத்தம் வந்து கொண்டிருக்கிறது. அது குறித்து நாம் அவர்களுடன் கோபித்துக் கொள்ளக் கூடாது. இந்தியாவில் இருக்கும் பௌத்த மக்களுடன் மேலானதொரு உறவை நாம் வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது இந்திய பாராளுமன்றத்தில் பௌத்த பிரதிநிதித்துவத்தை சக் திமிக்கதாக்க வேண்டும் என்பதாகும். (அல் அஸ்லம்)

15 comments:

  1. Dog barking too much.Please dear readers never mind this man speech at all.Just should send him Angoda forever.

    ReplyDelete
  2. we like to know which period muslim was 35000 if anybody has good knowledge about muslim history please write a good comment

    ReplyDelete
  3. தமிழர் போராட்டத்தில் அவர்கள் விட்ட தவறு அவர்களின் நியாயமான கோரிக்கைகளை சாதாரண சிங்கள மக்களிடம் எடுத்து விளக்குவதற்கு அவர்களிடம் நடு நிலையான ஓர் ஊடகம் இன்மையாகும்.. இந்த வகையில் நாம் எமது நிலைப்பாட்டினியும் நியாயங்களையும் முஸ்லிம் அடிப்படை வாதமற்ற ஓர் சிங்கள நாடு நிலையான ஊடகம் ஒன்றின் ஊடக முன்வைக்கலாம்.. எனவே இந்த காலகட்டத்தில் முச்ளிம்களிட்கான சிங்கல ஊடகம் ஒன்றினை ஆரம்பித்து சாதாரண சிங்கள மக்களிற்கு எம் நியாயமான விடயங்களை முன் வைப்பது இன்றைய கால கட்டத்தில் மிக முக்கியம் வாய்ந்த ஒன்றாகும். எனவே சிங்கள மொழியில் தேர்ச்சி பெற்ற சமூக ஆர்வலர்கள் இதட்கு ஒத்த்சை வழங்கி இதனை செயற்படுத்தினால் இதன் மூலம் சமுகங்களிட்கு இடையான வேற்றுமை குறைவடையும்.. நாம் தமிழில் எவ்வளவு தான் வாய் கிழியக் கத்தினாலும் உரியவர்களிட்கு இந்த செய்திகள் சென்றடையாத வரை ஒரு பிரயோசனமும் இல்லை

    ReplyDelete
  4. தொழில்னுற்ப்ப ஆய்வு அமைச்சர், பொய்யை எப்படி நுற்ப்பமாக சொல்வது என்று ஆய்வு செய்து பார்க்கின்ரான்,
    இன வெறி பிடித்த இது போன்ர மிருகங்களை அமைச்சரவயில் மட்டும் அல்ல நாட்டில் இருந்தே விரட்ட வேண்டும்.

    ReplyDelete
  5. unakku looosu angoda hospetalum kanadu

    ReplyDelete
  6. My dear champika you are most worried about muslim popu..n.ask your people to produce more children.dont put your nose in other comunity.try to reduse electricity bill.looking at others is not your duty.dont create unnes..ry problems.

    ReplyDelete
  7. NEE UNATHU AMACHCHAIK KAVANI , ADUTHTHA VEEDDAN PILLAI PERUVATHAI PARRI YOSIKKATHE , NALLA DOCTOR ORUVARAI SANTHI

    ReplyDelete
  8. I'm really worried about the mathematical knowledge of this politician. when 100 becomes 110 it is 10% increment,when 10 become 20 its 100% increment.Do u think people of this country will accept your foolish logical statistics.come on!learn the basics.

    As wel who wanted the sinhalese population to keep down? is it muslims? those days even sinhalese had many children, its the continuous increment of cost of living which had made the females to be employed that had lead to the reduction of the number of children.

    ReplyDelete
  9. you are right this low class dog is barking too to contest for presidential election with the sport of Balu senawa, before that we should send him to angoda as you said

    ReplyDelete
  10. தொழில்னுற்ப்ப ஆய்வு அமைச்சர், பொய்யை எப்படி நுற்ப்பமாக சொல்வது என்று ஆய்வு செய்து பார்க்கின்ரான்,
    இன வெறி பிடித்த இது போன்ர மிருகங்களை அமைச்சரவயில் மட்டும் அல்ல நாட்டில் இருந்தே விரட்ட வேண்டும்.

    ReplyDelete
  11. Ivanukalukku nallaahave paiththiyam pidiththullathu marunhu kidayathu

    ReplyDelete
  12. இந்தாளு நிச்சயம் பிட் அடிச்சு தான் engineer ஆகி இருப்பார். அறிவு சுத்தம்.. "வீரவிதான" இயக்கத்தை தோற்றுவிப்பதில் பிஸியா இருந்ததால் படித்து இருக்க மாட்டார். அமைச்சிலயும் renewable energy அது இது எண்டு எல்லோராலும் கைவிடப்பட்ட தியரிகளை தூக்கிப் பிடித்துக் கொண்டு இருந்தார்.

    ReplyDelete
  13. Hamuduruwanta Badinna Neethiyak Ganna Athakota Bowdayo Wadi Wae Ahama Natham Wayasata Geyata Passa Badina Aka Nawathtanna Numbala awrudu 60 badinna

    ReplyDelete

Powered by Blogger.