Header Ads



முஸ்லிம்களின் நலனிலும், மேம்பாட்டிலும் ஜனாதிபதி மஹிந்த மிகவும் அக்கறை


(Un) இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்களின் நலனிலும் அவர்களுக்கான மேம்பாட்டு நடவடிக்கைகளிலும் ஜனாதிபதி மிகவும் அக்கறையுடன் செயற்படுகின்றார் என பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

யுத்தத்தின் பின்னர் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி செயற்பாடுகள் குறித்து கவனம் செலுத்தாமலே அமெரிக்க பிரேரணை முன்வைக்கப்பட்டது. 

புலிகளினால் அதிக துன்பங்களை அனுபவித்த வடபகுதி மக்களுக்கு பெருமையும் கெளரவமும் கொண்ட வாழ்வை எமது அரசாங்கம் பெற்றுக் கொடுத்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எந்த நாட்டினாலோ தரப்பினராலோ இலங்கையை தனிமைப்படுத்தி விட முடியாது. சில இனவாத குழுக்கள் சிங்கள, முஸ்லிம் சமூகங்களிடையே பிளவு ஏற்படுத்த முயன்றாலும், ஜெனீவா அமர்வின்போது முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கியிருப்பதன் மூலம் இலங்கை குறித்த முஸ்லிம் நாடுகளின் நிலைப்பாடு தெளிவாக புலப்பட்டுள்ளது.

உலகம் முழுவதுமுள்ள முஸ்லிம் நாடுகள் பயங்கரவாதத்தை தோற்கடிக்கவும் யுத்தத்தின் பின்னர் நாட்டை முன்னேற்றவும் இலங்கைக்கு உதவின. 

2012ஆம் ஆண்டில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா பிரேரணையை முன்வைத்த போது முஸ்லிம் நாடுகளின் உதவியை பெற உலமா சபை ஒத்துழைத்தது. இதனால் 7 முஸ்லிம் நாடுகள் எமக்கு ஆதரவளித்தன.

இம்முறையும் பல முஸ்லிம் நாடுகள் ஆதரித்தன. ஐ. நா. மனித உரிமை பேரவையில் இலங்கையை பலப்படுத்து வதற்கு முஸ்லிம் நாடுகள் ஒன்றுபட்டு செயற்பட்டன. 

சகலரும் இணைந்து பிரச்சினைகளை தீர்க்கக் கூடிய நாடே இலங்கை, இனங்களுக்கிடையில் இணக்கப்பாடும் நல்லிணக்கமும் இருந்தாலே எம்மால் ஒரே இனமாக உலகத்தின் முன் கெளரவமாக எழுந்து நிற்கமுடியும். உலகத்தில் இலங்கையை தனிமைப்படுத்த சில நாடுகள் முயன்றாலும் முஸ்லிம் நாடுகள் அதற்கு இடமளிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்

2 comments:

  1. சகோதரர் செஞ்சோற்றுக்கடன் தீர்க்கின்றார்.

    ReplyDelete
  2. ஐயா உங்களைப் போல ஒருத்தர் இருந்தால் போதும் மகிந்தவைப் போல ஆயிரம் பேர் வாழ்ந்து விடுவார்கள். ஏன்யா கண்ணிருந்தும் குருடர்களாக வாழ்கிறீர்கள். உங்கள் கருத்து உண்மையா இல்லை நடிப்பா என்று விளங்கவில்லை. ஐயோ பாவம் உங்களை நம்பிய முஸ்லிம் மக்கள்.

    ReplyDelete

Powered by Blogger.