Header Ads



தேசத்துக்கு மகுடம் தமிழ், முஸ்லிம்களை கவரத் தவறிவிட்டதா?



பொதுஜன ஐக்கிய முன்னணி அரசின் பாரிய அபிவிருத்தித் திட்டங்களில் ஒன்றான தயட்ட கிருள எனும் தேசத்திற்கு மகுடம் கண்காட்சி கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, மட்டக்களப்பு, திருமலை, பொலன்னறுவை மாவட்டங்களை உள்ளடக்கி நடந்து முடிந்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி அரசு காலத்திலிருந்த “கம்உதாவ’ என்ற கிராம எழுச்சித் திட்டம் போன்று இந்த தேசத்திற்கு மகுடம் திட்டம் நடத்தப்படும் மாவட்டங்களில் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த திட்டம் அமுல் படுத்தப்படுவதனால் அந்தந்த மாவட்ட மக்கள் ஒரு வரப்பிரசாதமாகவே கருதுகின்றார்கள்.

கிழக்கு மாகாணத்தை மையமாக வைத்து நடத் தப்பட்ட தேசத்திற்கு மகுடம் திட்டம் இம்முறை சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் சமமாக வாழும் அம் பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களை பிரதான இலக்காக வைத்தே செயற்படுத்தப்பட்டது.

சுமார் 800 கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டுடன் ஒரு வருட காலமாக மேற்கொள்ளப்பட்ட இந்த தேசத்திற்கு மகுடம் திட்டம் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களை வெல்லத் தவறிவிட்டது எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது.

அம்பாறை மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம் பிரதேசங்களில் இத்திட்டத்தினூடாக பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என அப்பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். ஒதுக்கப்பட்ட நிதிகள்கூட வழங்கப்படாததனால் பல செயற்திட்டங்களை கைவிட வேண்டிய நிர்ப் பந்தம் ஏற்பட்டுள்ளது.

இத் திட்டத்தின் கீழ் சில இடங்களில் பாதைகளை செப்பனிட மற்றும் நிர்மாணிக்க திட்டம் வகுத்து, அதற்கான ஆரம்ப வேலைகள் ஆரம்பிக்கப்பட்ட போதும் அவை இடையில் கைவிடப்பட்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர். பாதைகளை செப்ப னிடக் கொண்டுவரப்பட்ட கற்கள் மற்றும் மூலப் பொருட்களை எடுத்துச் சென்றதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உயரிய நோக்கத்துடனே இந்த தேசத்திற்கு மகுடம் திட்டத்தை ஆரம்பித்தார். ஏழாவது கண்காட்சியே அம்பாறையில் நடந்து முடிந்துள்ளது. இந்தக் கண்காட்சிகளைப் பார்ப்பதற்கு தமிழர்கள், முஸ்லிம்கள் மிகச் சிறிய எண்ணிக்கையினரே சென்றுள்ளனர். இதன் காரணமாக பாடசாலைகளில் பரீட்சைகளை ரத்து செய்து மாணவர்களை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ், முஸ்லிம் பிரதேசங்களுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. அதனை எதிர்காலத்தில் ஒதுக்க நடவடிக்கை எடுப்போம் என அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவராகச் செயற்படும் அமைச்சர் அதாவுல்லாவின் கட்சியைப் பிரதிநிதித் துவப்படுத்தும் கிழக்கு மாகாண சபை அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை ஊடகவியலாளர் மகா நாடொன்றை நடாத்தித் தெரிவித்துள்ளார்.

தேசத்திற்கு மகுடம் கண்காட்சி மூலம் இங்கு வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களிடையே மேலும் நெருங்கிய பிணைப்பினை ஏற்படுத்த விருந்த வாய்ப்பு இழக்கப்பட்டுள்ளது. இக்கண் காட்சியை கண்டு களிப்பதற்கு தமிழ் முஸ்லிம்கள் செல்லாமைக்கு இதுவும் பிரதான காரணம் என்று கூறப்படுகின்றது.

அம்பாறை சிங்களப் பகுதியில் நடந்த அபிவிருத்தி திட்டங்களுடன் ஒப்பிடும்போது தமிழ், முஸ்லிம் பகுதிகளில் மிகக் குறைந்த அபிவிருத்தித் திட்டங்களே செயற்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகின்றது.  தமது பிரதேசத்திற்கான பங்கைப் பெற்றெடுப் பதற்கு இயலாதவர்களாக இப்பிரதேச தமிழ், முஸ் லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் இருந்துள்ளனர் என்ற குற்றச்சாட் டும் எழுப்பப்பட்டுள்ளது.

மூன்று இனங்களும் சமமாக வாழும் இந்த மாகாணத்தின் சனத்தொகைக்கு ஏற்ப நிதி பகிரப்பட்டி ருந்தால் எந்த ஒரு பிரதேசத்திற்கும் அநீதி ஏற்பட்டிருக்காது. எது எவ்வாறான போதும் தயட்ட கிருள இந்த மாவட்டங்களில் தமிழ், முஸ்லிம் மக்களை வெல்லத் தவறிவிட்டது. தயட்ட கிருள பிரதான முகப்பு கூட தனிச் சிங்களத்திலே அமைக்கப்பட்டுள்ளது குறித்தும் மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இது கூட அரசின் மொழிக் கொள்கையை மீறுவதாகவே உள்ளது.

கிழக்கு மாகாணத்தில் வாழும் மூன்று இனங்க ளையும் மேலும் நெருங்கி வாழ்வதற்கு இந்த பாரிய அபிவிருத்தி திட்டத்தை பயன்படுத்துவதற்கு இதனை நெறிப்படுத்தியவர்கள் மற்றும் கொள்கை வகுப்போர் தவறிவிட்டனர்.

இந்தத் தவறை நீக்க இன்னும் சந்தர்ப்பமுள்ளது. ஒதுக்கப்பட்ட நிதிகளை வழங்கி இடம்பெற்றுள்ள அநீதிகளை போக்கச் சந்தர்ப்பமுள்ளது. தேசத்திற்கு மகுடம் திட்டத்துக்கு பொறுப்பாகவுள்ள செயற்திறமையாக இயங்கும் சகல இன மக்களது நம்பிக்கைக்குமுரிய அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய இந்தத் தவறை போக்க நடவடிக்கை எடுப்பாரா?

1 comment:

  1. we know Athaullah & Udumalebbe and they will not get anything for Muslims and will not open their mouth against the Buddhist Monks who making trouble to Muslims and our culture.

    we never believe the dolls of the government.

    ReplyDelete

Powered by Blogger.