Header Ads



குஜராத் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதத்தில் 2 முஸ்லிம் மாணவர்களுக்கு தங்கப் பதக்கம்


குஜராத் பல்கலைக்கழகத்தில் பயிலும் இரண்டு முஸ்லிம் மாணவர்கள் சமஸ்கிருதப் பாடத்தில் தங்கப் பதக்கம் வென்றுள்ளனர். யாஸ்மின் பானு கோத்ரி என்கிற மாணவியும் தையூப்ஷா என்கிற மாணவருமே இவ்வாறு தங்கப் பதக்கம் வென்றவர்களாவர்.

சமஸ்கிருதம் தனக்கு மிகவும் விருப்பமானது என்று மாணவர் தையூப்ஷா தெரிவித்துள்ளார். அதிலேயே மேற்படிப்புப் படிக்க விரும்புவதாகவும் அவர் கூறினார். மாணவர் தையூப் ஷா வுக்கு கல்லூரி முதல்வர் பி.சி.ஷா பாராட்டுத் தெரிவித்தார். "சமஸ்கிருதத்தில் ஹிந்து மாணவர்களைக் காட்டிலும் முஸ்லிம்கள் சிறந்து விளங்குகின்றனர்" என்றும் முதல்வர் கூறினார்.

மாணவி யாஸ்மின் பணியில் இருந்தபடியே படித்து பதக்கம் வென்றுள்ளதும் குறித்திடத் தக்கது. nneram

1 comment:

  1. சமஸ்கிருதம் தமக்கு மிகவும் விருப்பமானதுஎன்று கூரியது போன்று ,ஹிந்து மதமும் எனக்கு விருப்பமானது என்று கூறாது விட்டால் சரி.இலங்கையில் சப்றாஸ் என்ற பிக்கு கூறியது போன்று.

    ReplyDelete

Powered by Blogger.