Header Ads



பூமியில் ஏற்படும் நிலநடுக்க அதிர்வு விண்ணிற்கு..!



ஜப்பானில் கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் டொஹோகு என்னுமிடத்தில், ரிக்டர் அளவில் 9 ஆகப்பதிவான மிகப்பெரிய பூகம்பம் ஏற்பட்டது. இதன் மெல்லிய கேளா அதிர்வு அலைகள் காற்றுமண்டலத்தில் கலந்து விண்ணில் சுற்றிக்கொண்டிருந்த கோஸ் சேட்டிலைட்டில் பதிவாகி இருப்பதாக தெரிவித்துள்ளது. 

பூமியில் இருந்து 255 கிலோமீட்டர் தூரத்தில் விண்ணில் சுற்றிவந்த அந்த கோஸ் சேட்டிலைட்டில் பொருத்தப்பட்டிருந்த 100 மடங்கு அதி நுண்திறன் கொண்ட பதிவுக்கருவியில் இந்த கேளா ஒலி அலைகளை பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ஒலியானது பூகம்பம் ஏற்பட்ட 30 நிமிடத்தில் பசிபிக் பகுதியிலும் மற்றும் ஐரோப்பாவின் மேல் பகுதியில்  25 நிமிடத்தில் விண்ணில் கடந்து சென்றதாகவும் சொல்லப்படுகிறது. ஈசா என்ற விண்கலமும் இந்த சப்த அலைகளை பதிவு செய்ததாக கூறப்படுகிறது. 

பொதுவாக, பூமியில் பெரிய அளவிலான பூகம்பம் ஏற்படுகிறபோது, அதன் கேளா ஒலி அலைகள் காற்று மண்டலத்தில் கலந்து மேல் நோக்கி செல்வது வழக்கம் என்று சொல்லப்படுகிறது.  

No comments

Powered by Blogger.