சீனாவில் பிள்ளைபிடி காரர்களிடமிருந்து 63 குழந்தைகள் மீட்பு
சீனாவில் குழந்தைகள் மற்றும் இளம்பெண்களை கடத்தி விற்கும் கூட்டத்தின் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இதனை கட்டுப்படுத்த போலீசாரும் தொடர்ந்து எதிர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வகையில், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சகம் சார்பாக 20 மாகாணங்களில் நடத்தப்பட்ட அதிரடி ரெய்டுகளின் பலனாக 63 குழந்தைகள் மற்றும் 14 இளம்பெண்கள் மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சக உயரதிகாரி ஒருவர் கூறினார்.
6 ஆயிரம் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் கடத்தல் கும்பல்களை சேர்ந்த 368 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

Post a Comment