யாழ் முஸ்லிம் ஒன்றுகூடல் ஒத்திவைப்பு..!
அன்புடன் யாழ் முஸ்லிம் சொந்தங்கள் அனைவரது கவனத்திற்கும்..!
ஏற்கெனவே திட்டமிட்டிருந்தபடி யாழ் முஸ்லிம் ஒன்றுகூடல் 2013 பெப்ரவரி 22,23,24,25ம் திகதிகளில் நடைபெறமாட்டாது என்பதையும், இன்ஷா அல்லாஹ் குறித்த நிகழ்வு 2013 ஏப்ரல் 12,13,14,15ம் திகதிகளில் நடைபெறும் என்பதையும் அறியத்தருகின்றோம். தென்னிலங்கையில் இனவாதிகளால் ஏற்படுத்தப்பட்டுள்ள அசாதாரண நிலைகளைக் கருத்தில்கொண்டு உலமாக்கள், மற்றும் மூத்த சமூகத்தலைவர்களினது அறிவுறைக்கமைய மேற்படி தீர்மானம் எட்டப்பட்டுள்ளது என்பதையும் பொதுமக்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
போட்டி நிகழ்ச்சிகளுக்கு அனுப்பப்பட்ட அனைத்த ஆக்கங்களும் போட்டிகளில் இணைத்துக்கொள்ளப்படும் என்றும் போட்டிகளுக்கான ஆக்கங்கள் அனுப்பவேண்டிய இறுதித் திகதி 2013 ஏப்ரல் 10 என்பதையும் கவனத்தில்கொள்க.
இவ்வண்ணம்
யாழ் முஸ்லிம் ஒன்றுகூடல் ஏற்பாட்டுக்குழு
யாழ்,கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனம்

Post a Comment