Header Ads



வெளிநாட்டு முஸ்லிம் விரோத சக்திகள் பேரினவாதக் குழுக்களுக்கு பணஉதவி

நாட்டில் 1300 ஆண்டுகளாக சிங்கள மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையே நீடித்து வரும் நல்லுறவை சீர்குலைப்பதற்கு பெரும்பான்மை இனத்தின் மிகச்சிறிய எண்ணிக்கையிலான பேரினவாத குழுக்கள் திட்டமிட்டு செயலாற்றி வருகின்றன என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் தெரிவித்தார்.

நாட்டில் தற்போது இடம்பெற்று வரும் முஸ்லிம் விரோத நடவடிக்கைகள் சம்பந்தமாக ஆராயும் விசேட கூட்டம் ஒன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு தலைமை வகித்து பேசும் போதே முதலமைச்சர் நஜீப் இவ்வாறு குறிப்பிட்டார். இக்கலந்துரையாடலில் கிண்ணியா ஜம்மியதுல் உலமா சபையின் தலைவர் ஷேக் ஹிதாயதுல்லாஹ் மற்றும் சபையின் நிர்வாக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.இங்கு தொடர்ந்து உரையாற்றும் போது முதலமைச்சர் நஜிப் அப்துல் மஜீத் கூறியதாவது.

சில வெளிநாட்டு முஸ்லிம் விரோத சக்திகள் இப்பேரினவாதக் குழுக்களுக்கு பணத்தை வழங்கி மீண்டும் இலங்கையில் பயங்கரவாதச் சூழ்நிலையை ஏற்படுத்த முயற்சிக்கின்றன. இதில் முஸ்லிம்கள் மிகவும் கவனமாகவும் நிதானமாகவும் நடந்து கொள்ள வேண்டும். இதற்காக ஐந்து வேளைத் தொழுகையில் பாதுகாப்பு வேண்டி அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம். உலமா சபையினரும் எம்மக்களை அமைதி காக்க பல முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும்.

சுதந்திரதின விழாவிற்கு திருமலை வந்திருந்த ஜனாதிபதியோடு நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் செயல்கள் பற்றி நீண்ட நேரம் உரையாடினேன்.

அப்போது ஜனாதிபதி எல்லோருக்கும் நாடு சொந்தமானது. எவரும் அச்சப்படவேண்டியதில்லை என்று கூறினார். முஸ்லிம் மக்களையும் அவர்களது பள்ளிவாசல்களையும் பாதுகாப்பது தமது கடமையாகும் என்றும் ஜனாதிபதி கூறினார். மூன்று இன மக்களும் சமமாக வாழும் மாவட்டமாக திருகோணமலை விளங்குகின்றது. இதனை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்  என்றும் ஜனாதிபதி தெரிவித்தார் என முதலமைச்சர் தெரிவித்தார்.

5 comments:

  1. அமைச்சரே இனவாதத்தை தூண்டுவது அரசாங்கம் என்று தெரிந்தும் வெளிநாட்டு சக்தி என்று சொல்கின்றீர்களே.அந்த வெளிநாடு எதுவென்று கூறுங்கள்.இல்லாத வெளிநாட்டை எப்படி கூறமுடியும். உங்கள் மாவட்டத்தை உங்காளால் காப்பாற்ற முடியாது.

    ReplyDelete
  2. entha நாட்டையும் மதிக்காது ஒரு ராணுவ பலத்துடன் கூடிய theeவிரவாதத்தையே அழ்ழித்த மகிந்தவுக்கு இந்த மத வாதத்தை கட்டுப்படுத்த முடியாதா என்ன ? அரசுடன் இருந்து வாலாட்டும் முஸ்லிம் அமைச்சர்கள் இப்படித்தான் eaதாவது அறிக்கை விடுவீங்க ...... எவனாவது முஸ்லிம்கலுக்காக பேசி பதவியை தூக்கி எரிந்து விட்ட சரித்திரம் உண்டா?

    ReplyDelete
  3. அரசங்க விசுவாசி அரசையும் ஜனாதிபதியையும் பாதுகாக்க முயற்சிக்கிரார். வெலிநாட்டுப் பணம் கிடைத்தாலும் நிரைவேற்ற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதி நினைத்தால் இன்ரே இனவாதத்தை நிருத்தலாம்

    ReplyDelete
  4. 3 KARUTHTHUKKALUM UNMAI.

    ReplyDelete
  5. அழத்தான் தோனுது..... குனூத் ஓதும் போது ஆயுதம் கேட்பீர்களா?........ பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுகிறார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.