மதமாற்றம் தடைசெய்யப்பட்ட லிபியாவில் கிறிஸ்தவ பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்கள் கைது
கிறிஸ்தவ அமைப்பினைச் சேர்ந்தவர்களென சந்தேகிக்கப்படும் 4 வெளிநாட்டு பிரஜைகள் லிபியாவின் கிழக்கு நகரான பெங்காஷியில் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
கிறிஸ்தவ மதம் பற்றிய 10 ஆயிரம் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டமை மற்றும் விநியோகம் செய்தமை போன்ற குற்றச்சாட்டின் கீழ் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக முன் பாதுகாப்புக்கான பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட முஸ்லிம் நாடான லிபியாவின் மதமாற்று பிரசாரங்களில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர். எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். எகிப்து, தென் ஆபிரிக்கா, தென் கொரியா மற்றும் அமெரிக்க குடியுரிமை கொண்ட சுவீடன் நாட்டுப் பிரஜைகளே கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை பெங்காஷியிலுள்ள வீடொன்றில் கிறிஸ்தவ மத பிரசாரங்களை உள்ளடக்கிய 45,000 புத்தகங்களை வெளியிடவுள்ளனர் என கிடைக்கப்பெற்ற தகவலுக்கமையவே பொலிஸார் அவர்களைக் கைது செய்து லிபியாவின் புலனாய்வுத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்நிலையிலே, ஏற்கனவே அவர்களால் மேலும் 25, 000 கிறிஸ்தவ மத சார்பான நூல்கள் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆயிரம் இயக்கங்கள் தோன்றி முயற்சித்தாலும் முஸ்லிம்களாக இருப்பவர்களை மதம் மாற்ற முடியாது. அதே நேரம் பணத்துக்காகவும் உலக ஆசா பாசங்களுக்காகவும் அந்நிய மதத்தவர்களிடம் விலை போபவர்களை முஸ்லிம்கள் என்று சொல்லவும் முடியாது. அவர்களை யாராலும் திருத்தவும் முடியாது.அல்லாஹ்வைத் தவிர.
ReplyDelete