Header Ads



இலங்கைவரும் வெளிநாட்டு பெண்கள் மீதான தொந்தரவுகள் அதிகரித்துள்ளதாம்..!


இலங்கைக்கு வரும் பெண் சுற்றுலாப் பயணிகள், தாம் வீதிகளில் செல்லும் போது தொந்தரவுக்கு உள்ளாக்கப்படுவதாக பொலிஸில் தொடர்ந்தும் முறையிட்டு வருவதுடன் இந்த முறைப்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கொழும்பில் கறுவாக்காடு பகுதிக்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் வந்த கலிபோர்னியாவின் பெண் ஒருவர், தாம் காலையில் நடைப் பயிற்சிகளை மேற்கொள்ளும் போது தொந்தரவுக்கு உள்ளாக்கியதுடன் தன்மை சிலர் கையடக்க தொலைபேசியில் படம் எடுத்ததாகவும் பொலிஸில் முறையிட்டுள்ளார்.

மேலும் நோர்வேயில் இருந்து இலங்கைக்கு வந்துள்ள பெண் ஒருவரும் நீர்கொழும்பு பகுதியில் தொந்தரவுகளுக்கு உள்ளானதாக பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார்.

இதேவேளை, பிரான்ஸில் இருந்து வந்திருந்த சுற்றாப் பயணி ஒருவர் தாம் பாலியல் ரீதியான தொந்தரவுகளுக்கு உள்ளானதாக குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் சிகிரியா மலைக்கு செல்லும் போது சிகிரியாவிற்குச் செல்வதற்கு மூவாயிரம் ரூபா வரையான பணத்தை அறிவிடுவதாக வெளிநாட்டு பெண்கள் முறையிட்டுள்ளனர்.

இது இவ்வாறிருக்க இலங்கைக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளய் பாலியல் குற்றங்கள் தொடர்பில் கவனமான செயற்பட வேண்டும். சிறுவர்களை கவனமாக கொண்டு செல்லல் வேண்டும்  எனவும்  பிரித்தானியா எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

1 comment:

  1. இதுதான் பௌத்த நாடு !!!.புத்தரின் போதனைகள் பின் பற்றும் மககள்.

    ReplyDelete

Powered by Blogger.