Header Ads



சமூக ஊடகங்களில் ஒழுக்கக் கோவையின் முக்கியத்துவம்


சமூக ஊடகங்களில் ஒழுக்கக் கோவையின் முக்கியத்தும் எனும் தலைப்பில் பிராந்திய ஊடகவியலாளர்களுக்கான இருநாள் வதிவிட செயலமர்வொன்றை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாடு செய்துள்ளது.

இதன் முதலவாது செயலமர்வு எதிர்வரும் மார்ச் மாத இறுதியில் புத்தளம் மாவட்டத்தில் நடத்த தீர்மானித்துள்ளது.  இந்த செயலமர்வில் புத்தளம் மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தமிழ், முஸ்லிம் ஊடவியலாளர்கள் கலந்துகொள்ள முடியும். இதன்போது தலைசிறந்த விரிவுரையாளர்களினால் விரிவுரைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

தமிழ் மொழி மூலம் நடைபெறவுள்ள இந்த செயலமர்வில்; கலந்துகொள்ள விரும்புபவர்கள் தங்களின் சுய விபரக்கோவையினை எதிர்வரும் பெப்ரவரி 28ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பவும்

  1. தமிழ் மொழி மூலம் நடைபெறவுள்ள இந்த செயலமர்வில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் சுய விபரக்கோவையினை பயிற்சி இணைப்பாளர், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம், A3-1/1, மெனிங் டவுன், எல்விட்டிகல மாவத்தை, கொழும்பு 8 (Programme Coordinator, Sri Lanka Muslim Media Forum, A3-1/1, Manning Town Flats, Elvitigala Mawatha, Colombo 8) என்ற முகவரிக்கோ அல்லது muslimmediaforum@gmail.com, rifthy.ali@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ February 28ம் திகதிக்கு முன் கிடைக்கக்கூடியதாக அனுப்பவும்.

No comments

Powered by Blogger.