பொதுபல சேனாவின் எச்சரிக்கையை ஜம்மியத்துல் உலமா சபை நிராகரிப்பு
நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் செயற்படும் பௌத்தசிங்கள கடும்போக்கு அமைப்பான பொதுபல சேனா குறித்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபய ராஜபக்ஸவிடம் நாளை செவ்வாய்கிழமை முறைப்பாடு செய்யப்படுமென அறிவித்துள்ள அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை பொதுபல சேனா முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல் விடுக்க அவர்கள் யார் எனவும் மறுகேள்வி எழுப்பியுள்ளது.
ஜம்மியத்துல் உலமா சபையின் செயலாளர் மௌலவி முபாரக் இதுதொடர்பில் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு மேலும் கூறுகையில்,
பொது பலசேனா நேற்று ஞாயிற்றுக்கிழமை மஹரகமவில் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தி ஹலால் சான்றிதழை இல்லாதொழிக்க ஒரு மாதகால அவகாசம் வழங்கியுள்ளது. அவர்களின் எச்சரிக்கை மிகப்பாரதூரமானது என்பதை நாங்கள் உணருகிறோம். இந்த எச்சரிக்கை நாட்டின் சமூக ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படுத்தும். எனவே பாதுகாப்புச் செயலாளரிடம் இதுகுறித்து முறைப்பாடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம்கள் ஹராத்தை உண்ணமுடியாது. ஹலால் முஸ்லிம்கள் மீது கடமையாக்கப்பட்டது. அதுதொடர்பில் எச்சரிக்கைவிட இனவாத அமைப்பான பொதுபல சேனாவிற்கு எந்த அருகதையும் கிடையாது. அவர்களின் எச்சரிக்கையை நாங்கள் நிராகரிக்கிறோம்.
எங்களுக்கு கால அவகாசம் கொடுக்கும் அதிகாரத்தை பொது பலசேனாவிற்கு வழங்கியது யார். அவர்களுக்கு அந்த அதிகாரம் கிடையாது. அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையானது நிலைமைகளை கூர்ந்து அவதானித்து வருகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமையும் தெஹிவளை பள்ளிவாசலில் இதுதொடர்பில் கலந்துரையாடினோம் எனவும் அவர் மேலும் கூறினார்.
அதேவேளை ஹலாலை விட்டுக்கொடுப்பது அல்லது ஹலாலை பறித்தால் அது இலங்கை முஸ்லிம் உம்மாவின் ஏனைய அடையாளங்களுக்கும் ஆபத்து விளைவிக்கும் என்பதை ஜம்மியத்துல் சபையின் தலைவர் றிஸ்வி முபத்தி நேற்றைய கூட்டத்தில் தெளிவாக விளக்கியதாகவும் அறியவருகிறது.

Masahallah well done Jamiathul ulama board.I love this board and we respect them they doing best duty for us.
ReplyDeleteபாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் முறையிடுவதை விட பொது பல சேனாவிடமே முறையிடலாமே செய்யலாமே???
ReplyDeleteMasha Allah Good Decision, dont afraid to this Podu Balasena, Take right Decision According to Quraan & Sunnah. Allah with us. "Asbunallah"
ReplyDeleteMasha Allah Good Decision, dont afraid to this Podu Balasena, Take right Decision According to Quraan & Sunnah. Allah with us. "Asbunallah"
ReplyDeleteஉலமா நாநாமாரே! நீங்கள் சொல்லுகின்ற (அமெரிக்க பிரசையான) செயலாளரும், மற்றுமொரு அமெரிககப் பிரசையான மொறகொடவும் அவரது மனைவியும் சேர்ந்துதானாமே இம்புட்டையும் செய்கினம்! ஆருக்கிட்டப்போய் எனத்த மொறப்படப் போறியள்!
ReplyDeleteஜெனிவாவுக்குப் போற காலம் வருகுது. றெடியாகுங்கோ.
அல்ஹம்துலில்லாஹ் நல்ல முடிவு. கொல்கையில் உருதியாய் இருங்கல். வல்ல அல்லாஹ்வும் மக்கலும் உங்கலோடு இருப்பார்கல்.
ReplyDeleteAllah, He will help you all go ahead.
ReplyDeleteWait and see?.......... இதை விட்டுக் கொடுத்தால் இனி எல்லாத்தையும் விட்டுக் கொடுக்க வேண்டும். அன்பார்ந்த அரசியல் வாதிகளே! ஆட்சியை மாற்றி அமைக்கும் சக்தி எம்மிடம் உண்டு இனியும் மௌனம் காத்து பயனில்லை. ஒன்றுபட்டு அரசிற்கு அழுத்தம் கொடுக்கவும். இவ்வுலக வாழ்க்கை எமக்கு சோதனைக்கே உங்களுக்கு வழங்கப்பட்ட அமானிதத்தை பாதுகாத்து மறுமை வாழ்க்கைக்காகவும் தேடிக் கொள்ளுங்கள்.
ReplyDeleteNow you are really talking. Keep it up
ReplyDeleteMuslimkal onrupattu ithanai munnadukka wandum acju vai thalamaitthuva paduththi kalamirankuvom insha Allah
ReplyDeleteமாஷா அல்லாஹ் நல்ல தீர்மானம்.
ReplyDeleteஇவற்றை வேடிக்கை பார்க்கும் முப்படைத்தளபதி, பதுகாப்புச் செயலாளர் மற்றும் நீதி அமைச்சர்களின் நிலைப் பாட்டை மிக வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
very good we need to work on this very carefully bodu bala sena having support from ................
ReplyDeletevery good. please do needful for Muslim don't give any chance to bodu bala senas requests.support of Allah always with right ways.
ReplyDeleteevarukkumk payappuda thavay ellai namakku allah erukkuraan
ReplyDelete