Header Ads



நாட்டின் கல்வித்துறைக்காக 4 மணித்தியாலயங்களை கல்வி அமைச்சில் செலவிட்ட ஜனாதிபதி


(எம்.எம்.ஏ.ஸமட்)

மகிந்த சிந்தனையின் எதிர்கால நோக்கின் அடிப்படையில் அமைச்சுக்களின் நடவடிக்கைகளை செயல்திறன் மிக்கதாக்கும் பொருட்டு, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஒவ்வொரு அமைச்சுக்களுக்கும் நேரடியாக விஜயம் மேற்கொண்டு அமைச்சுக்களினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகைள மீளாய்வு செய்யும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளார்.

அதற்கமைய, இதன் முதற்கட்டமாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று திங்கள் கிழமை காலை 10.30 மணிக்கு கல்வி அமைச்சு விஜயம் மேற்கொண்டுள்ளார். காலை 10.30 மணிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி பிற்பகல் 2.30 மணி வரை கல்வி அமைச்சில் இடம்பெற்ற கல்வி அமைச்சின் செயற்றிட்டங்களின் முன்னெற்ற மீளாய்வு தொடர்பான விளக்கமளிப்பில் கலந்துகொண்டுள்ளார்.

இதன்போது, கல்வித்துறையின் ஒவ்வொரு பிரிவிலும் மற்றும் கல்வி அமைச்சின் ஒவ்வொரு பிரிவுகளினாலும் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பில் விளக்கங்களைப் பெற்றுக்கொணடதுடன் கல்வித்துறையை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளையும் வழங்கி அவற்றைச் செயற்படுத்துமாறும் உரிய தரப்புக்களைப் பணித்துள்ளார்.

ஜனாதிபதியுடன் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, விளையாட்டுத்துறை அமைச்சர்,ஜனாதிபதியின்  செயலாளர் உட்பட அரச உயர் அதிகாரிகளும் வருகை தந்திருந்ததுடன் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன, அமைச்சின் செயலாளர் மற்றும் கல்வி அமைச்சி உத்தியோகத்தர்களும் இதில் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.