மன்னார் மாவட்டத்தில் சமூர்த்தி நிவாரண கொடுப்பனவுகள்
(இர்ஷாத் றஹ்மத்துல்லா)
வடக்கில் மீண்டும் ஆயுதக் கலாசாரத்தை ஏற்படுத்தி மக்களை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்ல சில சக்திகள் செயற்படுவதாகவும், அது அப்பாவி மக்களை பிழையான வழிக்கு இட்டுச்செல்லும் வகையில் மக்களை காட்டிக் கொடுத்து தமது அரசியலை செய்வதாகவும், அதற்கு மக்கள் துனைபோகி விடக் கூடாது என்று வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன் மன்னாரில் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்டத்தின் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் 2 வது வலய சமுர்த்தி பிரிவில் 948 குடும்பங்களுக்கு சமூர்த்தி நிவாரண கொடுப்பனவுகளை முருங்கன் மத்திய கல்லுாரி கேட்போர் கூடத்தில் வைத்து இன்று அமைச்சர் வழங்கி வைத்தார். நானாட்டான் பிரதேச செயலளார் சந்திர அய்யா தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர் றிசாத் பதீயுதீன் மேலும் பேசுகையில் கூறியதாவது,
இன்றைய சூழலில் தமிழ்-முஸ்லிம் மக்கள் மிகவும் ஒற்றுமையுடன் வாழ்ந்துவருகின்றனர். இந்த மக்களுக்கு என்னால் ஆற்றக் கூடிய அனைத்து பணிகளையும் செய்துவருகின்றேன். என்னில் இனவாதம், மதவாதம், மொழி வாதம் இல்லை.நானாட்டான் பிரதேச மக்கள் எதனை வேண்டி நிற்கின்றனரோ, அதனை இந்த நாட்டின் ஜனாதிபதியிடத்திலும்,அமைச்சர்களிடத்திலும் இருந்து பெற்று வந்து தருகின்றேன்.
கடந்த 30 வருடங்களாக எமக்கு இழைக்கப்பட்ட துன்பங்களும்இதுயரங்களும் போதும் இனிமேலும் அதனை எமக்கு தருவதற்கு எவரும் முயற்சித்தால் அதற்கு நாம் ஒரு போதும் இடமளிக்க கூடாது. இதன் மூலம் மீண்டும் யுத்தமொன்றை ஏற்படுத்த அவர்களினால் இடப்படும் துாபம் என்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.



முஸ்லீம்களின் தற்போதைய நிலமை பற்றி ரணில் விக்ரம சிங்க பாராளுமன்றதில் பேசிய பொது ஏன் நீங்கள் குறிக்கிட்டு அரசுக்கு வக்காலத்து வாக்கினிர்கள் .(அமைச்சர் ) நீங்கள் தான் வாய் மூடி மௌனியாக இருத்திர்கள் .பேஸ்ரவங்களையாவது பேஸ்ச விடுங்கள் . நீங்கள் எல்லாரும் அமைச்சு பதவிக்கு மாத்திரம் தான் .முஸ்லிம் சமுகத்தின் பிரச்சனைகளை திர்துவைக்கமாட்டிக .ஏன் என்றால் உங்களது பதவி பரி போய்விடும் என்ற பயம் உங்களுக்கு உண்டு.சுய நலத்தை பேண வேண்டாம் சமுக நலத்தை பேண வேண்டும்
ReplyDelete