Header Ads



ஒற்றுமையின் அவசியம்..!

(அபூ சபதா)

இன்றையே இலங்கை முஸ்லிம்களினது உடனடி தேவை ஒரே சொல்லில் சொன்னால் அது ஒற்றுமை. ஒற்றுமை இன்று முஸ்லிம்கள் மத்தியில் இல்லாத ஒன்றாகி போயுள்ளது முஸ்லிம்கள் இயக்க வேறுபாடு அற்று ஒன்று படுதல் வேண்டும். முழு இலங்கைக்குமான தனியான முஸ்லிம் தொடர்பாடல் வசதிகள் தேவை அதன் மூலம் செய்திகள் எல்லா முஸ்லிம்களின் காதுகளிலும் உடனே சென்று சேரக் கூடியதாக இருக்க வேண்டும். அதேநேரம் சகல அமைப்புகளினதும் ஊர்களினதும் பிரதி நிதிகளை கொண்ட ஓர் அமைப்பின் அவசியத் தேவையும் இருக்கிறது. அதன் மூலம் முஸ்லிம்களின் அரசியல் சமூக பிரச்சினைகள் மட்டும் பேச பட வேண்டும். 

ஜம்மியத்துல் உலமா மார்க்க ரீதியான சட்டங்களுக்குள் மட்டுப்படுத்த பட வேண்டும். இந்த அமைப்பை கொண்டு முழு இலங்கைக்குமான ஓர் முஸ்லிம் தலைமை ஏற்படுத்த படவேண்டும் இஸ்லாமிய அரசியல் தலைமைகள் ஒரே கட்சியின் கிழ் ஒன்று சேர வேண்டும். அப்படி அவர்கள் ஒன்று சேர மறுக்கும் பட்சத்தில் அவர்களைப் புரம் தள்ளி விட்டு நமக்கென ஓர் தலைமையை நாம் ஏற்படுத்த வேண்டும் அந்த தலைமையைக் கொண்டும் நமது சமுக அரசியல் பிரச்சினைகள் தீர்த்து வைக்க பட வேண்டும். அதேநேரம் இந்த அமைப்பானது ஒவ்வொரு ஊர்களிலும் வெவ்வேறு பெயர்களில் இயங்க வேண்டும். தேர்தல் காலங்களில் அமைப்பு தேர்தெடுக்கும் உறுபினர்களுக்கு மக்கள் வாக்கு அளிப்பவர்களாக தமது சமுதாய முன்னேற்றத்தை மாத்திரம் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். 

நமக்குள் எதிர் கட்சிகள் இருக்க கூடாது அவ்வாறு எதிராக வருபவர்களுக்கு மக்கள் வாக்கு அழிக்க கூடாது. அரசியல் தலைமைகள் தலைமைத்துவ ஆசையை கை விட்டு சமுதாய நலன்களை கருத்தில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு காலத்துக்கும் தலைமைகள் மாற்றி அமைக்கும் பட்சத்தில் இந்த பிரச்சினையை நாம் தீர்த்து கொள்லாம். தலைமைக்கு கட்டு படும் மக்களாகவும் தலைமை உறுப்பினர்களினதும் சமுதாய மக்களினதும் ஆலோசனனைக்கு மதிப்பு கொடுக்க கூடியவராகவும் இருக்க வேண்டும்.

மொத்தத்தில் அமைப்புக்கான முழுமையான யாப்பு ஏற்படுத்த படவேண்டும். அமைப்பின் நோக்கம் சுயநலம் தவிர்ந்த சமூக நோக்கமாக இருக்க வேண்டும். 
சிங்கள பவ்வுத்தர்களுக்கு அவர்களின் புத்த மதத்தை பின்பற்ற என்ன உரிமையுள்ளதோ அதே உரிமை முஸ்லிம்களுக்கும் மற்றவர்களுக்கும் உண்டு என்ற உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும். அவர்களின் உரிமைக்கு அவர்கள் போராடுவதை போல் நமது உரிமைக்கு நாம் இஸ்லாமிய விழுமியங்களுடன் போராட முன் வர வேண்டும். அதேநேரம் நமது மார்க்க சட்டங்கள் மற்ற மத்தவர்களை வற்புறுத்துவதாக அமையக் கூடாது அது அவர்களின் விருப்பமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த மார்க்கத்தில் வற்புறுத்தல் இல்லை என்று குரானே சொல்கிறது. 2:256. (இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை; வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது; ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் - அல்லாஹ்(யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான். 

அகவே அதை நாம் கருத்தில் கொள்வோமாக. இன்று இருக்கும் முஸ்லிம் அரசியல் வாதிகள் மார்க்கம் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் பாராளுமன்ரலில் முஸ்லிம்கள் சம்மதமாக எழுப்ப படும் கேள்விகளுக்கு முழுமையான ஆரோக்கியமான பதில்கள் கொடுக்க கூடியவர்களாக இருக்க வேண்டும் அல்லது அவ்வாறான நபர்கள் நாடாளுமன்றம் தெரிவு செய்யபட வேண்டும். இவைகள் நம்மால் ஏற்படுத்த முடியுமாக இருந்தால் அதுவே நமது வெற்றி இது சிந்தனைக்கு மட்டுமே என்று நினைக்காமல் செயல் படுத்த முயலுங்கள் நாளை மறுமாமையில் நிறைந்த நன்மைக்குரீயவர் ஆவீர்கள். நாம் பெரும் சக்தியாக மாற ஒன்று பட்டால் உண்டு வாழ்வு. 


1 comment:

  1. தமது விரல்களாலே கண்களுக்கு குத்திகொண்ட நிலைதான் இன்றைய எமது நாட்டில் இருக்கும் முஸ்லிம்களின் இன்றைய நிலைப்பாடு.முஸ்லிம் சமூகம் என்ற பெயர் மாறி சுன்னி,சலபி,வஹ்ஹாபி என்று கூறுகளாக பிரிந்து தனது கொள்கையை வளபடுத்த பேரினவாதிகளின் வலைகளில் சிக்கி நல்லது செய்கிறோம் என்று மடத்தனத்தில் தனது முஸ்லிம் சமூகத்தை காட்டி கொடுத்த பிரதிபளிப்பே இன்று ஹலால் ,பெண்களின் பர்தா,இன்னும் பல பிரச்சினைகள் விசித்திரம் பெற்றுள்ளது.

    ReplyDelete

Powered by Blogger.