Header Ads



மீண்டும் அனுப்பிவிடாதீர்கள் - மியன்மார் முஸ்லிம்கள் உருக்கமான வேண்டுகோள்

காப்பாற்றப்பட்டவர்கள் தம்மை மீண்டும் மியன்மாருக்கு அனுப்ப வேண்டாம் என்று கோரிக்கை விடுப்பதாகவும் அதனால் அடுத்தக் கட்டம் தொடர்பில் அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாகவும் அஸ்ஸஜி தேரர் தெரிவித்துள்ளார்.

கிழக்கிலங்கை கடல்பகுதியில் மீட்கப்பட்ட மியன்மார் பிரஜைகள் தமது நாட்டில்  உள்ளூர் பௌத்தர்களின் துன்புறுத்தல்களுக்கு உள்ளானதாகவும், பொருளாதார தேடல் நிமித்தமாக தமது நாட்டிலிருந்து வெளியேறியதாகவும் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் மியன்மார், பங்களாதேஷ் எல்லையில் ராக்கைன் பிராந்தியத்தைச் சேர்ந்தவர்கள் என அவர்களை சந்தித்துப் பேசிய மியன்மார் மொழிபெயர்ப்பாளராக செயற்படும் காலி மாளிகாவில அஸ்ஸஜி தேரர் தெரிவித்துள்ளார்

No comments

Powered by Blogger.