அக்குரணை பைத்துஸ் ஸகாத் அமைப்பின் உதவிகள்
(இ. அம்மார்)
அனர்ததம் ஒன்று எமக்கு ஏற்படுமாயின் எம்முடைய வாழ்வியல் முறை அப்படியே உடைந்து கீழு விழுந்து விடும் இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களை மீளக் கட்டி எழுப்புவதற்காக தம் பிரதேசத்திலுள்ள அமைப்பினூடாக மிகுந்த அக்கறை செலுத்தி ஊர் மக்களிடம் திரட்டப்பட்ட நிதியினை அந்தப் பிரதேசத்திலுள்ள மக்களுக்கு உதவியாக வழங்குவது என்பது உண்மையிலேயே இது அரசாங்கத்திற்கு செய்யும் பாரிய பங்களிப்பாகும் என்று கண்டி மாவட்ட இடர் அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் இந்திக ரணவீர தெரிவித்தார்.
அக்குரணை பைத்துஸ் ஸகாத் அமைப்பின் ஏற்பாட்டில் அக்குரணை பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிங்கள மற்றும் முஸ்லிம் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கி வைக்கும் வைபவம் அக்குரணை அஸ்னா மத்திய ஜும் பள்ளிவாசலில் அமைப்பின் தலைவர் மவ்லவி என். எஸ். எம். கஸ்ஸாலி தலைமையில் 18 -02 -2013 அன்று நேற்று நடபெற்றது.
இவ்வமைப்பின் ஊடாக 22 குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கி வைக்கப்பட்டன. ஒருவரின் இழப்பீட்டிற்குரிய மதிப்பீட்டிற்கு ஏற்ப 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட நிதி இங்கு வழங்கி வைக்கப்பட்டது
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட கண்டி மாவட்ட இடர் அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் இந்திக ரணவீர அங்கு இவ்வாறு குறிப்பிட்டார்.bஅவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்,
அனர்த்தங்கள் திட்டமிட்டு எதிர்பார்த்து வருவதல்ல அதனை வேறு யாரும் செய்வதுமில்லை. இவ்வாறு நிகழ்ந்து விடடால் நாங்கள் அதிலிருந்து மீட்சி பெற வேண்டும். இதற்காக பல்வேறு பிரிவுகளிலிருந்து உதவிகள் கிடைக்குமானால் நம் வாழ்வியல் முறையை மிக இலகுவா சீரமைத்துக் கொள்ளலாம். அதே போன்று இந்தப் பிரதேசத்தில் சமீபத்தில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவியது. அப்பொழுது கூட இந்தப் பிரதேசத்திற்கு சமூக அமைப்பின் ஊடாக சகலருக்கும் தண்ணீர் உதவி வழங்கப்பட்டது. இது போன்று பல்வேறு நிவாரண உதவிகள் இந்தப் பிரதேசத்தில் நடைபெறுகின்றன. இந்த உதவிகள் யாவும் தாம் சார்ந்து நிற்கும் சமூகத்தை மாத்திரம் பிரதிபலிக்கக் கூடியதாக அல்லாமல் சகல மக்களையும் பிரதிபிக்கக் கூயடி வகையில் ஒரு சமத்துவமான அடிப்படையில் நடைபெறுகின்றது கூடுதலாக தான் சார்ந்த சமூகத்தை மாத்திரம் கருத்திற் கொண்டதாகவே உதவிகள் வழங்கப்படுவது உண்டு. ஆனால் அவ்வாறான நிலை ஒன்றை இங்கே காண்பதற்கு இல்லை என்றுதான் கூற வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட அக்குரணை பிரதேச செயலாளர் ஓ. எம். ஜாபீர் பேசுகையில்,
அக்குரணை பிரதேச செயலகப் பிரிவில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக ஐந்து கோடி ரூபாவுக்கு மேற்பட் நஷ;டங்கள் ஏற்பட்டுள்தாக அக்குரணை பிரதேச செயலாளர் ஓ. எம். ஜாபீர் தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்,
இந்தப் பாதிப்பு நிலையிலிருந்து இயல்பு வாழ்வு நிலைக்கு கொண்டு வருதற்கு அரசாங்கத்தின் பிரிவுகளிலுள்ள அனைத்து அரச நிறுவனங்களும் பங்களிப்பு செய்துள்ளன. இடர் அனர்த்த முகாமைத்துவ நிலையம், பொலிஸ் நிலையம், சுகாதார சேலைப் பிரிவு உள்ளிட்ட அரச நிறுவனங்களின் உதவிகள் எமக்கு கிடைத்தன. அத்துடன் பிரதேசத்திலுள்ள அனைத்து சிவில் அமைப்புக்களுடைய ஆதரவுடன்தான் துரித கதியில் ஒரு இயல்பு நிலைக்கு கொண்டு வர முடிந்தது.
சிவில் அமைப்புக்களின் பங்களிப்பு என்பது உலக இரண்டாம் மஹா யுத்தத்தின் போது ஆரம்பிக்கப்பட்டதாகும் . இந்த பைத்துல் ஸகாத் நிறுவனம் 2004 ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட போது ஆரம்பிக்கப்பட்டதொன்றாகும் அது அன்று இருந்து இன்று வரை சமூக சேவை நடவடிக்கையில் எண்ணற்ற பங்களிப்பை ஆற்று வருகிறது எனவும் இவ்வமைப்பின் சேவையைப் பாராட்டி அவர் மேலும் பேசினார் இந்நிகழ்வில் இவ்வபை;பின் உப தலைவர் பீ. ஏ, சீ. எம். ரமீம். செயலாளர் எஸ். எம். எம். மஹ்ருப் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.



Post a Comment