கண்டி வைத்தியசாலை டாக்டர்களின் சாதனை
மூளை மீதிருந்த கட்டியை வெற்றிகரமாக அகற்றி சுமார் எட்டு இலட்;ச ரூபா செலவில் மேற்கொள்ள வேண்டியச சத்திர சிகிட்சையை குறைந்த செலவான 12 000 ரூபா செலவில் மேற்கொண்டு சாதனை படைத்துள்ளது கண்டி வைத்தியசாலை.
பல்லேபெத்த கெ.ஜீ.சந்திராவதி என்ற பெண்மணியின் தலையில் ஏற்பட்ட வலிகாரணமாக அங்கிருந்த கட்டி பற்றி நான்கு வருடங்களுக்கு முன்பு தெரிய வந்துள்ளது. 52 வயதான இப் பெண்மணி இரண்டு குழந்தைகளின் தாயாவார். தனியார் மருத்துவ மனையில் சத்திர சிகிட்சையை மேற்கொள்ள அவர் பணவசூலை மேற்கொள்வதற்காக சீட்டுக்களை அச்சிட்ட வேளை அதனைக் கண்ணுற்ற விசேட வைத்திய நிபுணர் டப்ளியு.டீ.லெஸ்லி சிரிவர்தன அவரை அழைத்து அதற்கான சிகிட்சைகளை கண்டி வைத்திய சாலையில் மேற் கொண்டுள்ளார்.
மேற்படி படலத்தை அகற்றும் போது வெட்டி அகற்றப்பட்ட மண்டையோட்டின் ஒரு பகுதிக்கு 5ஓ5 டைடேனியம் தகடு ஒன்று பொருத்தப்பட்டதாகவும் இதற்கு நான்கு ஆணிகளை வாங்குவதற்கு மட்டுமே 12 000 ரூபா செலவானதாகவும தெரிய வருகிறது. பலரும் இது தொடாபாக பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

wow இவர் போன்றவர்கள் இருப்பதால் தான் டாக்டர்களுக்கு சமூகத்தில் ஒரு அந்தஸ்து கிடைக்கிறது,ஆனாலும் பல டாக்டர்கள் ?????? சொல்லவே தேவையில்லை.
ReplyDelete