Header Ads



கிழக்கு மாகாண சபை இனிமேல் அவசரமாகவும் கூடும்...!

(இர்பான்)

கிழக்கு மாகாண சபையின் மாததந்த அமர்வு சபையின் தவிசாளர் ஆரியவதி கலப்பதி தலைமையில் நடைபெற்றது. இந்த மாததந்த அமர்வின் போது தனிநபர் பிரேரணை சம்பந்தமான குழுநிலை விவாதம் இடம் பெற்றது.

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை அவர்களால் முன்வைக்கப்பட்ட பிரேரணையானது இம்மாகாணத்தில் அனர்த்தங்கள் ஏற்படும்போது விசேட தேவை எனக்கருதி மாகாணசபையின் தலைவியின் அனுமதியோடு விசேட சபை அமர்வை ஏற்படுத்தல் என்பதாகும். இந்த பிரேரணைக்கு ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

தலைவர்,
கிழக்கு மாகாண சபை
தனிநபர் பிரேரணை 
கிழக்கு மாகாண செயல்முறைக்கோவை

கிழக்கு மாகாண சபையானது கடந்த 10.05.2008 ஆந் திகதி நடாத்தப்பட்ட முதலாவது மாகாணசபை தேர்தலைத் தொடர்ந்து, மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதி நிதிகளினூடாக நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. இம் மாகாணசபை நடவடிக்கைகளைத் திறம்பட முன்னெடுப்பதற்கு ஏதுவாக, 1987ம் ஆண்டு 42ம் இலக்க மாகாண சபை சட்டத்திற்கிணங்க கிழக்கு மாகாண சபை செயன்முறைக்கோவை தயாரிக்கப்பட்டு, 07.10.2008ம் திகதியில் 1ம் இலக்க சபை தீர்மானத்தின் மூலம் மாகாண சபையினால் அங்கீகரிக்கப்பட்டு, அது அதி உத்தம ஜனாதிபதி அவர்களின் அனுமதி பெறப்பட்டுள்ளது.

இச் செயல்முறை விதிக்கோவை 16(2) பிரிவிற்கு அடுத்து, 16(2)(அ) எனும் உப பிரிவாக கீழ்வரும் பந்தி உட்புகுத்தப்பட வேண்டியது அவசியம் ஏற்படுகின்றது. இதன் மூலம் தற்போது செயற்பாட்டிலுள்ள மாகாண சபை கூட்ட நடைமுறைகளை மேலும் சிறப்பாகவும், பயனுறுதி வாய்ந்ததாகவும் மாற்றியமைக்கலாம். இது கிழக்கு மாகாண மக்களுக்கு மேலும் ஜனநாயக வழிமுறையில் பங்கேற்க ஏதுவாக அமையும்.

16(2)(அ) சபைத் தலைவர் மிக முக்கியமானவை எனக் கருதும் விடயம் அல்லது விடயங்கள் தொடர்பில் சிறப்புக் கூட்டங்களை செயன்முறை விதிக்கோவையின் ஒழுங்கு விதிகளுக்கமைய கூட்டலாம்.

மேற்படி திருத்தத்திற்கமைவாக சபையின் செயன்முறைக்கோவையை திருத்துவதற்கு நியதிச் சட்டக் குழுவின் சிபார்சைப் பெற்று உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.


எம்.எஸ்.உதுமாலெப்பை, மா.ச.உ
வீதி அபிவிருத்தி அமைச்சர்
கிழக்கு மாகாணம்.



No comments

Powered by Blogger.