ரஷ்யாவை தாக்கிய எரிகல் 30 அணுகுண்டு வேகத்தில் விழுந்தது - நாசா விஞ்ஞானிகள்
ரஷியாவில் யுரல் மலைப் பகுதியில் கடந்த 15-ந்தேதி சக்தி வாய்ந்த எரிகல் ஒன்று விழுந்தது. சிறு நட்சத்திர வகையை சேர்ந்த அந்த எரிகல் சுமார் 10 டன் எடை கொண்டது. 55 அடி அகலம் உடையது.
54 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில், ஒளிப்பிழம்பை கக்கிய படி வந்து தரையில் விழுந்த அந்த எரி நட்சத்திரம் மோதுவதற்கு முன்பு 3 துண்டுகளாக உடைந்தது.
அதனால் நாலாபுறமும் தெரித்து விழுந்த எரிகல்லின் துகள்கள் தாக்கியதில் சிலியா பின்ஸ்க் நகரில் சுமார் 1200 பேர் காயம் அடைந்தனர். ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து சேதம் அடைந்தன.
இந்த எரிகல் மிகவும் சக்தி வாய்ந்தது. இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை விட அதிக சக்தி கொண்டது. ஜப்பான் ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டை விட 30 மடங்குக்கும் மேலான வேகத்துடன் வந்து விழுந்தது
இந்த தகவலை அமெரிக்காவின் “நாசா” மார்ஷல் விண்வெளி மையத்தின் எரிகல் சுற்றுச்சூழல் அமைப்பு தலைவர் பில் கூக் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறும்போது அந்த எரிகல் 50 கிலோ டன் சக்தியுடன் சூரியனை விட மிக பிரகாசமான நெருப்பு பந்து போல் வந்து விழுந்தது என்றும் அவர் கூறினார்.

Online Quran memorization classes
ReplyDelete