ஜமாஅத்தே இஸ்லாமியை தடைச்செய்வதை ஆதரிப்போம் - பங்களாதேஷ் பிரதமர்
(தூது) பங்களாதேஷில் வலைப்பூ பதிவர் ஒருவர் கொலைச் செய்யப்பட்டதை தொடர்ந்து பிரபல இஸ்லாமிய இணையதளத்தை அரசு முடக்கியுள்ளது.ஸொனார் பங்க்ளா என்ற இணையதளத்தை அரசு முடக்கியுள்ளது.
பங்களாதேஷில் பிரபலமான ஜமாஅத்தே இஸ்லாமியின் எதிர்ப்பாளரான வலைப்பூ பதிவர் ஒருவர் நேற்று முன் தினம் கொல்லப்பட்டார்.இக்கொலையின் பின்னணியில் ஜமாஅத்தே இஸ்லாமியும், அதன் மாணவர் அமைப்பான ஷத்ர ஷபீரும் தான் காரணம் என்று குற்றம் சாட்டி சில அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன.1971 போர்க் குற்றவாளிகளை உடனடியாக கைதுச் செய்யவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
போர்க் குற்றவாளிகளை கைதுச் செய்யவேண்டும் என்று கோரி இரண்டு வார காலமாக தலைநகரான டாக்காவில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.போராட்ட பேரணியில் கலந்துகொண்டு திரும்பும் வேளையில் வலைப்பூ பதிவரான 35 வயது ரஜீப் கத்தியால் குத்தப்பட்டு இறந்தார்.கொலையின் பின்னணியில் ஜமாஅத்தே இஸ்லாமி என்று அவரது சகோதரர் குற்றம் சாட்டினார்.ஆனால், குற்றச்சாட்டுக்களை ஜமாஅத்தே இஸ்லாமி மறுத்துள்ளது.இச்சம்பவத்தில் அமைப்புக்கு பங்கில்லை என்றும், கொலையை கண்டிப்பதாகவும் அவ்வமைப்பு கூறியுள்ளது.
இதனிடையே ஜமாஅத்தே இஸ்லாமியை தடைச்செய்வதை ஆதரிப்போம் என்று அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹஸீனா கூறியுள்ளார்.ரஜீபின் உறவினர்களை சந்தித்தபிறகு அவர் இதனை கூறினார்.ஜமாஅத்தே இஸ்லாமி ஜனநாயகத்தை நம்புவதில்லை என்று ஹஸீனா குற்றம் சாட்டினார்.
1971-ஆம் ஆண்டு நடந்த போர் தொடர்பாக எதிர்கட்சி தலைவர்களை விசாரணை நடத்துவதற்கு கண்டித்து ஜமாஅத்தே இஸ்லாமி எதிர்ப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.போரில் பாகிஸ்தானுக்கு உதவியதாக குற்றம் சாட்டி ஜமாஅத்தே இஸ்லாமி மற்றும் எதிர்கட்சி தலைவர்களை ஷேக் ஹஸீனா உருவாக்கிய தீர்ப்பாயம் விசாரணைச் செய்கிறது.

விபச்சாரம் தடை செய்யப்படாத நாடாச்சே
ReplyDelete