எகிப்து ஜனாதிபதியின் மகன் ஒமர் முர்சிக்கு விமானதுறை நிறுவனத்தில் வேலை
எகிப்து அதிபர் முகமது முர்சியின் மகன் ஒமர் முர்சி. இவர் விமானத்துறை சம்மந்தப்பட்ட ஒரு நிறுவனத்தில் பணியில் சேர விண்ணப்பித்துள்ளார். அங்கு அவருக்கு மாத சம்பளம் இந்தியா ரூ.6300 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 6 மாதம் கழித்து ரூ.10 ஆயிரம் ஆக சம்பளம் உயர்த்தி வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை அந்த நிறுவன அதிகாரி கேப்டன் மக்டிஅப்டெல்-ஹாடி எற்றுக் கொண்டுள்ளார். ஆனால் சம்பளம் ரூ.6300 அல்ல. ரூ.27 ஆயிரம் என தெரிவித்துள்ளார். எகிப்தில் அரசு வேலைக்கு ரூ.4 ஆயிரத்துக்கும் குறைவாகவே சம்பளம் வழங்கப்படுகிறது. எனவே, தனியார் நிறுவனங்களில் வேலைக்கு செல்ல பட்டதாரிகள் விரும்புகின்றனர்.

Post a Comment