Header Ads



பள்ளிக்குடியிருப்பு முகம்மதியா பாடசாலைய ஆசிரியர் ஒன்றுகூடலும், மாணவர் செயற்பாடுகளும்


அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் கடந்தாண்டு ஆரம்பிக்கப்பட்ட புதிய பாடசாலைகளுள் அக்கரைப்பற்று குடியிருப்பு முகம்மதியா வித்தியாலயமும் ஒன்றாகும். அப்பாடசாலையில் இவ்வாண்டு (2013) தரம் ஒன்றில் 92 மாணவர்கள் கற்றலுக்காக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். புதிய மாணவர்களுடன் கடந்த வருட மாணவர்களும் இணைந்து தங்களது கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்ளும் வகையில் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட ஆசிரியர்களுக்கு பாடசாலையில் மேற்கொள்ள வேண்டிய கற்றல் நடவடிக்கைகள் சம்பந்தமான கலந்துரையாடல் ஒன்று இன்று(2013.01.22) அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்குப் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம். ஜெமில், ஆசிரிய ஆலோசகர் எம்.ஏ. அபூதாஹிர் ஆகியோர் ஆசிரியர்களுக்கு விளக்கமளிப்பதையும் வித்தியாலய மாணவர்கள் காலை ஆகாரம் உண்ணுவதற்காக அணி அணியாக வருகைதந்து கைககள் மற்றும் தட்டுக்களை கழுவுவதையும், வகுப்பறையில் அமர்ந்து ஆகாரம் உண்ணுவதையும் படங்களில் காணலாம்.









No comments

Powered by Blogger.