கொழும்பு ஸாஹிரா, கம்பளை ஸாஹிரா கல்லூரிகளிடையே கால்பந்தாட்ட போட்டி
கொழும்பு ஸாஹிரா மற்றும் கம்பளை ஸாஹிரா கல்லூரிகளுக்கிடையிலான பழைய மாணவர்களது வருடாந்த சினேகபூர்வ கால்பந்தாட்டப் போட்டிகளில் கொழும்பு ஸாஹிரா கல்லூரி வெற்றிபெற்றது.
பிரதமர் டி.எம். ஜயரத்னாவின் அந்தரங்கச் செயலாளர் அனுராதா ஜயரட்டன பிரதம அதிதயாகக் கலந்துகொண்ட இப் போட்டிகள் கம்பளை, ஸாஹிரா கல்லூரி விளையாட்டு மைதானத்தில் அண்மையில்; நடைபெற்றது.
இப்போட்டியை இரு கல்லூரிகளினதும் பழைய மாணவர் சங்கங்கள் ஏற்பாடு செய்திருந்தன. 40 வயதின் கீழான் போட்டியில் 5-2 என்ற கோல் அடிப்படையிலும் 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான போட்டியில் 2-1 என்ற கோல் அடிப்படையிலும் கொழும்பு ஸாஹிரா கல்லூரி பழைய மாணவர் அணிகள் வெற்றிபெற்றன.
பழைய மாணவர்களுக் கிடையேயான சினேக பூர்வமான உதைப்பந்தாட்டப் போட்டியின் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட பிரதமர் டி.எம் ஜயரத்னாவின் பிரத்தியேகச் செயலாளர் சட்டத்தரணி அனுராத ஜயரத்ன அவர்கனுக்கு இரு அணியினரும் அறிமுகம் செய்து வைக்கப்படட போது எடுக்கப்பட்ட படம்.

Post a Comment