Header Ads



தவறு செய்பவர்களுக்கு தண்டனை வழங்குவதே நீதித்துறையின் மரபு


(ஜே.எம்.ஹபீஸ்)

ஒருவர் தவறு செய்தால் அவர் எத்தகைய உயர் நிலையில் இருப்பினும் அதுபற்றிக் கவனியாது அதற்கான தண்டனையை வழங்குவதே நீதித்துறையின்  மரபாகுமென்று பிரதமர் டி.எம்.ஜயரத்ன தெரிவித்தார். கம்பளை விக்ரமபாகு தேசிய பாடசாலையில் இடம் பெற்ற ஒரு செயலமர்வில் பிரதம அதிதியாகக் கலந்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

வாழ்கையின் எழுச்சி(திவிநெகும) வேலைததிட்டம் தொடர்பாக  இடம் பெற்ற செயலமர்வில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

குடிமகனொருவர் ஏதும் தவறு இழைப்பாராயின் சமூகம் அதற்கு எதிராக பொங்கி எழுவது தவிர்க்க முடியாத ஒன்றாகும். யாராவது ஒருவர் தவறு செய்தால் சமுகம் அவரைக் குற்றவாளியாகக் காண்பது இயழ்பு.

பொருளாதார ரீதியில் சமூக அமைப்புக்களை உயர்வடையச் செய்வதற்கு அரசு பல வழிகளிலும் முயற்சி செய்கிறது. இதற்கு மிகவும் இறுக்கமான சட்டதிட்டங்களைக் கொண்ட சமூக அமைப்பு முறை ஒன்று தேவை. அப்படியல்லாத பட்சத்தில் உயர்வடைய முடியாது.

நாட்டை அபிவிருத்தி செய்யும்பணியில் இன்றுசுகாதார,தொழில் நுட்ப, மற்று; அடிப்படை வசதிகள் தொடர்பான பல்வேறு வேலைத்திட்டங்களை அரசு முன் எடுத்துச் செல்கிறது. காலியில் அமைக்கப்பட்டுள்ள மாகம்புர சர்வதேச துறைமுகம் போன்று சகல மாவட்டங்களிலும் உள்ளுர் விமான நிலையங்களை அமைக்கும் பணியில் அரசு முயன்று வருகிறது.

முப்பது வருட யுத்த முடிவின் பின் ஏற்பட்டுள்ள நிரந்தர சமாதானத்தினூடாக நாட்டை வளமாக்கும் பல்வேறு திட்டங்களை அரசு செயல் படுத்தி வருகிறது. எம்நாட்டில் ஏற்படுத்தப்பட்டு வரும் பொருளாதார அல்லது பௌதீக வளர்ச்சி போன்று சமய ரீதியாகவும் ஓர் மறுமலர்ச்சியை ஏற்படுத்துர்ம முயற்சியில் அரசு இறங்கியுள்ளது. 2600 வது புத்த ஜயந்தி தொடாபான வேலைத்திட்டங்கள் ஊடாக சமய மறுமலர்ச்சிக்கான திட்டங்கள் பல முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அவற்றை வெற்றிகரமாக முன் எடுப்பதே அரசின் முக்கிய நோக்கமாகும்.





No comments

Powered by Blogger.