திவிநெகுமே சட்டத்திற்கு ஆதரவளித்தமை குறித்து முஸ்லிம் காங்கிரஸின் விளக்கம்..!
திவிநெகுமே சட்டத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் 14 திருத்தங்களை முஸ்லிம் காங்கிரஸ் சமர்ப்பித்ததாகவும், அவற்றை நடைமுறைப்படுத்த பொருளாதார அபிவிருத்திய அமைச்சர் பஸில் ராஜபக்ஸ உறுதியளித்துள்ளதாகவும் முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் ஹசன் அலி தெரிவித்தார்.
இதுகுறித்து யாழ் முஸ்லிம் முஸ்லிம் இணையத்திற்கு விளக்கம் வழங்கிய ஹசன் அலி மேலும் குறிப்பிட்டதாவது,
திவிநெகுமே சட்டமூலம் தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத் தரப்புடன் முக்கிய பேச்சுக்களில் ஈடுபட்டது. நேற்று திங்கட்கிழமை இரவும் நாம் பஷில் ராஜபக்ஸவை சந்தித்தோம். இதன்போது நாம் 14 திருத்தங்களை அவரிடம் கையளித்தோம் அந்த திருத்தங்களை அவர் ஏற்றுக்கொண்டார். எமது திருத்தங்களை திவிநெகுமே சட்டத்தில் உள்ளீர்ப்பதாகவும் வாக்குறுதி வழங்கிளார்.
இதையடுத்து நேற்று நள்ளிரவு வரை தொடர்ந்த முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட கூட்டத்தில் திவிநெகுமே சட்டத்திற்கு சட்டத்திற்கு ஆதரவளிப்பதென நாங்கள் தீர்மானித்தோம். முஸ்லிம் காங்கிரஸ் 8 எம்.பி.க்கள் மாத்திரம் எதிர்த்து நின்றிருந்தாலும் இந்த சட்டம் நிறைவேறியிருக்கும். இப்போது சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எமது ஆலோசனைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்கிழமை உரையாற்றிய அமைச்சர் பஸில் ராஜபக்ஸகூட திவிநெகுமே சட்டத்திற்கு ஆரோக்கியமான ஆலோசனைகளை முன்வைத்த கட்சி முஸ்லிம் காங்கிரஸ் மாத்திரம்தான என பாராட்டினார்.
எதிர்வரும் காலங்களில் திவிநெகுமே சட்டத்தின் மூலம் ஏற்படும் பலாபலன்கள் முஸ்லிம் சமூகத்திற்கும் சாதகமாக அமையும். அவ்வாறான திருத்தங்களைத்தான் முஸ்லிம் காங்கிரஸ் முன்வைத்துள்ளது எனவும் ஹசன் அலி மேலும் குறிப்பிட்டார்.

Nalla kanakku ondri kalatti vittu, kathiyada solreenga. Jaathi durokikal.
ReplyDeleteஇவ்வாறுதான் கிழக்கு முதலமைச்சர் நியமனத்தின்போதும் எங்களது ஒத்துழைப்போடு நஜீப் A மஜீத் அவர்களை முதலமைச்சராக நியமித்துள்ளோம். முஸ்லிம் காங்கிரஸ் சொல்வது போல அவர் நடந்து கொள்வார் என்று சொன்னீர்கள். ஆனால் கட்சி மாகாண சபை உறுப்பினர்களே , கிழக்கு முதலமைச்சர் எங்களை ஒதுக்குகிறார் என பேராளர் மாநாட்டிலே கூறினர். இப்போது திவிநெகும சட்டமூலத்தில் 14 திருத்தங்களை கொண்டுவந்துள்ளதாக கூறுகிறீர்கள். அமைச்சர் பசில் ராஜபக்ச அவர்கள் முஸ்லிம் காங்கிரஸ் ஆரோக்கியமான ஆலோசனைகளை தெரிவித்த கட்சி என பாராளுமன்றத்தில் கூறியதாக பெருமைப்படுகிறீர்கள்! ஆனால் என்ன என்ன ஆலோசனைகள் என்று கூறினாரா?, அல்லது நீங்களாவது 14 திருத்தங்களும் என்ன என அறிக்கை விட மாட்டீர்களா? மேலும் நீங்கள் எதிர்த்து வாக்களித்து இருந்தாலும் சட்டமூலம் வெற்றி பெற்று நிறைவேறி இருக்கும் என கூறி உள்ளீர்கள் , வெட்கமாக உள்ளது, ஏனெனில் எதிர்ப்பது என்பது தோற்கடிப்பதற்கு அல்ல , நியாயத்தை, உரிமையை பேசுவதற்கே. பிரஜைகள் முன்னணியின் ஸ்ரீரங்காவின் துணிவு கூட உங்களுக்கு இல்லையா? ஒன்று மட்டும் நிச்சயம் முதலமைச்சர் விடயத்தில் ஏமாந்ததை ஒத்துக்கொண்டதைப் போல , திவிநெகும விடயத்திலும் பிழை விட்டதை ஒத்துக் கொள்ளத்தான் போகிறீர்கள். என்ன செய்ய யாரை நம்புவது ? எல்லோரும் ஒன்றுதானே! யா அல்லாஹ் எங்களை பாதுகாப்பாயாக.
ReplyDeletesatta moolam niraiveriyachu.. Ungada 14 thittathayum kondu kuppaila pottutu adutha dramaku readyahunga sir....
ReplyDeleteஹசன் அலி இன்று சொன்னதை நான் அன்றே சொல்லி விட்டேன். நிபந்தனையுடன் ஆதரிக்கிறோம் என்று சொல்லுவார்கள் என்று.
ReplyDeleteஅடுத்து,நீங்கள் எதிர்த்து வாக்களித்தாலும் வாக்களித்தாலும் வெற்றி பெரும் என்றும் கூறினேன். நீங்கள் எதிர்த்து வாகளித்தலும் வெற்றி பெரும் என்று கூறுகிறீர்களே வெக்கமில்லை? காரணமே நீங்கள் தான். கிழக்கில் எதிர்த்து வாக்களித்தல் இன்று பிரேரணை பாராளுமன்றம் வந்திருக்குமா? மாறி மாறிப் பேசுபவன் முனாபிக்.
நீங்கள் எத்தனை பேர் எதிர்த்தாலும் சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கும் ஆனால் இதில் மறைந்திருக்கும் பல விடயங்களில் ஒன்று பிரித்தாலும் தந்திரம். அணைத்து சிங்கள கட்சிகளும் இந்த சட்டமூலத்துக்கு ஆதரவானவையே!
ReplyDeleteMasha Allah,
ReplyDeleteGood Moooove with success.
First ever win to SLMC with MR Government....
we all pray for more success to slmc and Muslim Community...
Alhamdulillah....
1987 யில் புத்தளம் YMMA மர்க்ஸ் பின்புறம் நபீல் ஹாஜியார் தலைமையில் இலங்கையின் முதலாவது முஸ்லிம் கொங்கிரஸ் அறிமுகக்கூட்டம் ஒன்று நடைபெற்றது சகோதரர் அஷ்ரபும் சகோதரர் சேகு இஸ்ஸ்டீனும் வந்திருந்தார்கள் அப்போது சகோதரர் ரவுப் ஹகீம் இல்லை இப்போது உள்ள அனைவரும் இணைந்து கொண்டது பத்து வருடங்கள் பின்புதான் .....நானும் சகோதரர் பாயிசும் .. பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற் ...அந்தகூட்டத்தில் .... முதல் உறுப்பினராக இணைந்து கொண்டோம் அங்கு சேகு இஸ்ஸதீன் பின்வருமாறு கூறினார் ....மாகாண சபை வருகிறது முதலாவது புத்தளத்தில் நடைபெறும் ..பின்னர் கிழக்கு மாகாணம் ...கிழக்கில் முஸ்லிம் மாகான சபையை உருவாக்க வேண்டும் ...அந்த மாகாண் சபை தான் முஹம்மது அலி ஜின்னாஹ் பாகிஸ்தானை எப்படி உருவாக்கினாரோ ..அந்த அடிப்படை நோக்கமாக இருக்கவேண்டும் ...இலங்கையில் உள்ள சிங்களவர்கள் மத்தியில் வாழும் முஸ்லிம்கள் பாதிக்கப்படும் போதெல்லாம் குரல் எழுப்பும் ""கிழக்கிஸ்தானாய் ""உருவாகவ்ண்டும் .என்றார் .புத்தளத்தில் முதல் முஸ்லிம் கொங்கிரஸ் பிரதிநிதியாக அரசியல் மரத்தின் முதல் கனியாக தெரிவு செய்யப்பட்டேன் ..எனினும் ..>>...அவருடைய காலத்தில் அது கைக்கூட வில்லை ... ஆனால்... சமீபத்தில் .. கைக்கு கிடைத்த முஸ்லிம் மாகாண சபையை கைகழுவிட்ட பெருமை ஹகீம் அவர்களையே சாரும் .... எல்லாமே இப்போது முடியப்போகிறது திவி நெகும சட்டத்தை ஆதரித்தன் .மூலம் ... மாகாண சபயே கைகழுவி போய்விடும் ....இத்தோடு முஸ்லிம் கொங்கிரஸ் இறந்த இடம் தெரியாமள் போய்விடும்
ReplyDeleteDrama vil SLMC ellorum maha keddik kararhal. ya Allah Please Save our Muslim Community inthe maathiriyane thirudarhalidamirunthu.
ReplyDeleteவிளக்கம் என்றால் இதுதான் விளக்கம். முஸ்லிம் முதலமைச்சரை விட்டுக்கொடுக்கவும் நீங்கள் விடுத்த கோரிக்கைகள் அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றன. இப்போது திவி நெகும திட்டத்திற்கும் நீங்கள் கொடுத்த 14 திருத்தங்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றன. ஆனால், இதிலுள்ள பகடி , என்ன கோரிக்கைகள் , என்ன திருத்தங்கள் என உங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு தெரியாது. அதை நீங்கள் பகிரங்க படுத்த போவதும் இல்லை.
ReplyDeleteவாக்களித்த நாங்கள் எல்லாம் கறிவேப்பிலைகள்தானே! அடுத்த தேர்தலுக்கு, " நாரே தக்பீர்" என முழங்கியவாறு வந்தால் திரும்ப வாக்குகளை அள்ளிவிடப்போகின்றோம்.
வாழ்க உங்கள் இணக்க அரசியல்!
14 ஆலோசனைகளும் என்னவென்று மக்களுக்கு ஒன்றும் தெரியாது. அந்த 14 உம் சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டதா என்றால் இல்லேவே இல்லை. 14உம் அரசு ஏற்றுக்கொண்டால் சட்டமூலம் திருத்தப்பட்டு வாக்கெடுப்பு நடந்திருக்க வேண்டும் அல்லவா. அதுதான் உங்களுக்கு பெருமையாக இருக்கும். மாறாக அடுத்த 3 மதத்தில் திருத்தப்படும் என்று அரசு சொன்னதாக நீங்கள்தான் சொல்கிண்றீர்கள் ஆனால் அரசு சொல்லவில்லை. ஜோக் என்னவென்றால், வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்தை எவ்வாறு திருத்தமுடியும் என்ற விநா எழுகிறது. அரசு நினைத்தால் திருத்தலாம் என்பார்கள், அவ்வாறெனில் மீள் வாக்கெடுப்பு நடாத்தவேண்டும் அல்லவே. அதை அரசு 100% செய்யாது. மொத்தத்தில் காங்கரஸ் மக்களை ஏமாத்தி பழக்கப்பட்ட கட்சி என்பதற்கு இது நல்லதோர் உதாரணம். அதுபோல் மக்களும் எமாழிகள் என்பதும் திண்ணம். அரசால் காங்கிரஸ் ஏமாந்த, மக்களை காங்கரஸ் எமாத்திய நிகழ்வுகள் பலவற்றை அடுக்கிக்கொண்டே போகலாம்.
ReplyDeleteமக்கள் காங்கிரசை மட்டும் விமர்சிக்க கரணம் உண்டு. அதாவது மாற்று முஸ்லிம் கட்சிகள் முழுக்க முழுக்க வெளிப்படையாக அரசுக்கே ஆதரவு. ஆனால், காங்கிரசோ மக்கள் முன் 100% அரசுக்கு விரோதமான, ஆக்ரோசமான பேச்சு. வாக்குமூலம் வென்றுவிட்டு 1000% அரசுக்கு மறைமுக முழு ஆதரவு. கிழக்குமாகான தேர்தலுக்குப்பிறகு, எத்தனையோ முஸ்லிம்களுக்கு எதிரான நிகழ்வுகள் நடந்துள்ளது ஆனாலும் காங்ரஸ் அரசுக்கு முழு ஆதரவு அளிக்க இவர்களை எது திருப்திப்படுத்தியது?
Ithuthan tharintha vidayam than Hakeem apaium apadi than inthatha
ReplyDeletegoot
ReplyDelete