நல்லாட்சிக்கான மக்கள் இயக்க ஏற்பாட்டில் வெள்ள நிவாரண உதவி (படங்கள் இணைப்பு)
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
கிழக்கு மாகாணத்தில் பல்வேறு அரசியல் சமூக வேலைத் திட்டங்களை முன்னெடுத்துவரும் காத்தான்குடி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் அடைமழை காரணமாக பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு வெள்ள நிவாரணப் பொதிகள் வழங்கும் நிகழ்வின் அங்குரார்ப்பண நிகழ்வு செவ்வாய்கிழமை மாலை மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் முஹைத்தீன் ஜூம்மா பள்ளிவாயல் வளாகத்தில் இடம்பெற்றது.
இதன் போது வெள்ள அனர்த்த்தினால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு சூறா சபை அமீர் எம்.பி.எம்.பிர்தௌஸ் நளீமி மற்றும் ந.ம.இ. காத்தான்குடி நகர சபை உறுப்பினர் எம்.நஸீர் மற்றும் சூறா சபை உறுப்பினர்களால் நிவாரனப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் ந.ம.இ. காத்தான்குடி நகர சபை உறுப்பினர் எம்.எச்.ஏ.நஸீர் 'ந.ம.இ. செயலாளர் முஹ்ஸீன் 'செயற்குழு உறுப்பினர்களான பைசர் அமான்'முஸம்மில்' ந.ம.இ. சூறா சபை உறுப்பினர்களான சரீப் 'இர்ஸாத் மற்றும் பள்ளிவாயல் நிர்வாக சபை உறுப்பினர்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
இங்கு மஞ்சந்தொடுவாய் முஹைத்தீன் ஜூம்மா பள்ளிவாயல் மஹல்லாவைச் சேர்ந்த 200 பேருக்கு நிவாரனப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.






Post a Comment