ஜோர்டானில் பாராளுமன்ற தேர்தல் - இஹ்வானுல் முஸ்லிம் புறக்கணிப்பு
(Tn) இஸ்லாமியவாதிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் ஜோர்தானில் இன்று பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. வெறுமையான வாக்குறுதி மற்றும் பல்லில்லாத பாராளுமன்றத்திற்கு நாம் போட்டியிடப் போவதில்லை என இஸ்லாமியவாதிகள் அறிவித்துள்ளனர்.
அரபு நாடுகளில் ஏற்பட்ட மக்கள் எழுச்சி போராட்டத்தை தவிர்க்கும் வகையில் ஆளும் மன்னர் இரண்டாவது அப்துல்லா சிறு சீர்திருத்தங்களுடன் புதிய பாராளுமன்ற முறையை அறிவித்த நிலையிலேயே இன்று தேர்தல் நடைபெறவுள்ளது. எனினும் மன்னரின் அதிகாரத்தை வலுப்படுத்தும் வகையிலேயே பாராளுமன்றத் தேர்தல் அமைந்திருப்பதாகக் கூறி சக்திவாய்ந்த பிரதான எதிர்க் கட்சியான முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு மற்றும் ஏனைய கட்சி கள் இந்த தேர்தலை புறக்கணி த்துள்ளன.
‘சீர்திருத்தத்திற்கு பின்னரான பழைய பாராளுமன்றம் தனது இயலாமையை வெளிக்காட்டியது. எதிர்வரும் பாராளுமன்றத்திடமும் எதுவும் எதிர்பார்க்க முடியது. அது இன்னும் மோசமாக இருக்கும்’ என்று முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் துணைத் தலைவர் சக்கி பானி ரiத் ஏ. எப். பிக்கு கூறினார். 150 ஆசனங்களைக் கொண்ட ஜோர்தான் பாராளுமன்ற கீழவைக்கு சுமார் 1500 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 2.27 மில்லியனுக்கும் அதிகமானோர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். எனினும் பாராளுமன்றத்தில் அரசியல் கட்சிகளுக்கு வெறுமனே 27ஆசனங்களே ஒதுக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான பிரதிநிதிகளை மன்னர் நேரடியாக தேர்வு செய்கிறார். எனினும் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை 30 வீதமாக அதிகரிக்குமாறு முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு அழுத்தம் கொடுத்து வருகிறது. கடந்த 2010 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலையும் அந்த அமைப்பு புறக்கணித்தது.
இந்நிலையில் இம்முறை தேர்தலிலும் பழங்குடித் தலைவர்கள், அரசுக்கு ஆதரவானவர்கள் மற்றும் சுயாதீனமான தொழிலதிபர்கள் ஆகியோர் அதிக வாக்குகளை பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment