Header Ads



சீனாவில் விவாகாரத்து அதிகரிப்புக்கு 'குடும்பத்திற்கு ஒரே குழந்தை' தான் காரணமாம்..!


சீனாவில், விவாகரத்து செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவிற்கு அதிகரித்து வருகிறது. ஒரு குடும்பத்திற்கு ஒரே குழந்தை என்ற நிலைதான் இதற்கு முக்கிய காரணம். புனித நாள் என கருதப்பட்ட தினத்தில் திருமணம் செய்தவர்கள் கூட, விவாகரத்து கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.

சீனாவில், ஜனவரி, 4ம் தேதி, என்பதை சீன மொழியில் உச்சரிக்கும்போது, அது, "காதல் அழிவதில்லை' என்ற அர்த்தத்தில் இருக்கும். இதனால், அன்றைய தினத்தில் ஏராளமானோர் திருமணம் செய்து கொள்ள விரும்பினர். இதில், முக்கியத் திருப்பமாக, இப்புனித நாளில் திருமணம் செய்து கொண்டவர்களில் பலர், விவாகரத்து கேட்டு, கோர்ட் வாசப்படியை மிதித்துள்ளதாக, சீன பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.

வர்த்தக நகரமான ஷாங்காயில் மட்டும், இப்புனிதநாளில், 7 ஆயிரம் பேர் திருமணம் செய்து கொண்டனர். நான்கு நாட்களுக்குப் பின், விவாகரத்து கோரி விண்ணப்பித்த ஒரு தம்பதியர் கூறுகையில்," அவசர கதியில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது' என, தெரிவித்தனர். ஷாங்காய் நகரில் மட்டும் விவாகரத்து எண்ணிக்கை, 13 சதவீதம் அதிகரித்துள்ளது.கடந்த ஆண்டில் மட்டும் 44, 364 தம்பதியர் விவாகரத்து பெற்றுள்ளனர். சீனாவின் மற்ற நகரங்களிலும் இதே நிலைதான் காணப்படுகிறது. இது குறித்து ஷாங்காய் திருமணப்பதிவு அலுவலக அதிகாரி ஒருவர் கூறியதாவது,,

சீனாவில், 1980க்குப் பிறகு திருமணம் செய்த தம்பதியருக்கு, ஒரே ஒரு குழந்தை மட்டுமே உள்ளது. இவ்வாறு வளரும் குழந்தைகள் மிகவும் தன்னலத்துடன் வளர்கின்றன. அவர்களிடம் பொறுமை என்பதே இல்லை. இதே நிலைமைதான், அவர்களது திருமண வாழ்விலும் எதிரொலிக்கிறது. கணவன், மனைவி ஆகியோருக்கிடையே சண்டை சச்சரவுகள் ஏற்படும்போது யாருமே விட்டுக் கொடுப்பதில்லை. இருவரும் ஒரே மாதிரியான சூழ்நிலையில் வளர்க்கப்பட்டதுதான் இதற்கு முக்கிய காரணம்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments

Powered by Blogger.