Header Ads



'கல்விசார் செயற்பாடுகளுக்கு ஆசிரியர்களினதும், அதிபரினதும் அர்ப்பணிப்பு அவசியம்'

(எஸ்.எல். மன்சூர்) 

'ஒரு பாடசாலையின் எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் அப்பாடசாலையின் ஆசிரியர்களும், அதிபருமே காரணமாக அமைகின்றனர்' என அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் அஷ்சேஹ் ஏ.எல்.எம். காசீம் அவர்கள் இன்று (2013.01.22) அக்கரைப்பற்று குடியிருப்பு அல்பாயிஷா மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற வருடாந்த வெளிவாரி மதிப்பீட்டுக்கான மதிப்பீடுகளை முடித்துவைத்து அப்பாடசாலை ஆசிரியர்களுக்கு மத்தியில் உரையாற்றும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.  வித்தியாலய அதிபர் எம்.ஏ.ஏ. இஸ்ஸடீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அக்கரைப்பற்று வலயத்தினது பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம். முத்தலிப் மற்றும் உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர். 

இந்நிகழ்வின்போது மேலும் உரையாற்றுகையில் 'அக்கரைப்பற்று வலயத்தின் சிறப்பான கல்விச் செயற்பாடுகளுக்கு வித்திடும் பாடசாலைகளில் இப்பாடசாலையும் ஒன்று. திறைமையான அதிபர், சிறப்பான ஆசிரியர்கள், விடாமுயற்சியுடன்கூடிய கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் தங்களை அர்ப்பணிப்பு சிந்தையுடன் சேவையாற்றுவது போற்றத்;தக்கதாகும். கடந்த 2011ஆம் ஆண்டில் தரம் 5புலமைப்பரிசில் பரீட்சை பெறுகளின் அடிப்படையில் இவ்வலயத்தின் அதிகூடிய அடைவுமட்டத்தை விகிதாசார அடிப்படையில் பெயர்வாங்கிக் கொடுத்திருந்தது. கடந்தவருடமும் கூடியளவு மாணவர்களை வெளிக்கொணரவைத்திருந்தது. அதேபோல சாதாரணதரம், உயர்தர வகுப்புக்களின் அடைவுகளும் சிறப்பானதாகவே காணப்படுகின்றன. இருந்தாலும் சில சில பிரச்சினைகள் எழலாம். அதனையெல்லாம் சவாலாக ஏற்று மாணவர்களின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளுக்கு எவ்வித இடையூறுமின்றி சிறப்பான அடைவினை பெற்றுக் கொள்வதற்குரிய நடவடிக்கைகளை ஆசிரியர்கள் மேற்கொள்ளவேண்டும். இவ்வருடத்திலிருந்து அர்த்தமுள்ள வகையில் வெளிவாரி மதிப்பீட்டுகளை மேற்கொள்வதற்குரிய ஏற்பாடுகளை நாங்கள் மேற்கொண்டிருக்கின்றோம். இவ்வருடத்தின் ஆரம்பத்திலேயே இப்பாடசாலைக்கு வெளிவாரி மதிப்பீட்டுக்காக இப்பாடசாலை தெரிவு செய்யப்பட்டமை இங்கு கற்றல் செயற்பாடுகள் சிறப்பாக நடைபெறுகின்றன என்பதையே சுட்டிக் காட்டுகின்றது' எனவும் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார். 






No comments

Powered by Blogger.