இலங்கையர் மூவர் தமிழ்நாட்டில் பலி
புதுவை அனுக்சை குப்பம் அருகே இடம் பெற்ற வாகன விபத்தில் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த மூன்று பேர் பலியாகினர். கட்டிட தொழிலில் ஈடுப்பட்டு வந்த இவர்கள் தொழிலுக்காக சென்று அகதி முகாம் திரும்பி கொண்டிருந்த போதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
மோட்டார் சைக்களில் பயணித்த மூவரும் சென்னையில் இருந்து சென்ற ரசாயன பாரவூர்தி ஒன்றில் மோதுண்ட நிலையில் கனக செட்டிக்குளத்தில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனையடுத்து சிகிச்சை பலனளிக்காத நிலையில் புதுவை இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த மூவரும் உயிரிழந்தனர். சம்பவம் தொடர்பான விசாரணைகளை கோட்டக்குப்பம காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். Sfm

Post a Comment