'தனிமையில் இருந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடும்' - ஆய்வில் தகவல்
"தனிமையில் இருந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடும்' என, அமெரிக்க ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.இது குறித்து அமெரிக்காவின் ஓஹியோ பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர் லிசா ஜரேம்கா கூறியதாவது,,
"தனிமையில் இருக்கிறோம்' என, ஒருவர் நினைத்தால், அவர் உடனடியாக, நண்பர்களை பார்க்க செல்லலாம். அல்லது, வேறு ஏதேனும் பொழுதுபோக்கு அம்சங்களை நாடலாம். மாறாக, தனித்து இருக்கும் பட்சத்தில், அவருக்கு பல்வேறு விதமான உடல்நலக் குறைபாடுகள் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன. முதலாவதாக, நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடும். புரத ச்சத்து குறைபாடு ஏற்படுவதுடன், மனப்பதட்டம், அமைதியின்மை போன்ற பிரச்னைகளும் எழலாம். நீரிழிவு நோய், மூட்டுவலி போன்றவையும் ஏற்படக்கூடும். மற்றவர்களுடன் சரியான உறவுமுறைகளை பராமரிக்காத பட்சத்தில், பல்வேறு விதமான உடல்நலக் குறைபாடுகளும் ஏற்படுகின்றன. கர்ப்பிணிகளுக்கு, சரியான நேரத்திற்கு முன்னதாகவே, குழந்தைகள் பிறத்தல் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. எனவே, தனிமையை தவிர்த்து விடுதல் நல்லது.
இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment