இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு உதவ குவைத் பூரண விருப்பம்
(குவைத்திலிருந்து என்.எம்.அமீன்)
ஆசிய ஒத்துழைப்பு உரையாடல் மாநாடு செவ்வாய்க்கிழமை குவைத்தில் பிரமாண்டமான முறையில் ஆரம்பமாகியது. குவைத் அமீர் ஷெய்க் சபா அல் - அஹமட் அல் - ஜபார் அல் – சபா தலைமையில் ஆரம்பமான இந்த மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 33 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இவர்களில் 12 நாடுகளின் தலைவர்களும் உள்ளடங்குவர்.
அரபு மொழியில் நடைபெற்றுவரும் இம்மநாடு சமகாலத்தில் ஏனைய மொழிகளிலும் மொழிபெயர்ப்புச் செய்யப்படுகிறது.
குவைத் அமீர் ஷெய்க் சபா அல் - அஹமட் அல் - ஜபார் அல் – சபா தனது தலைமையுரையில் ஆசிய நாடுகளுக்கான அரபு நாடுகளின் நிதியுதவி திட்டங்கள் குறித்து அறிவிப்புச் செய்தார்.
அரபு நாடுகள் அல்லாத ஆசிய நாடுகளுக்கு உதவுவதற்காக 2 பில்லியன் நிதி திரட்டப்பட வேண்டும் என்று தான் ஆலோசனை வழங்குவதாக குவைத் மன்னர் தெரிவித்தார். அத்துடன் குவைத் அரசாங்கமானது ஆசிய நாடுகளின் மேம்பாட்டுக்காக 300 மில்லியன் டொலரை வழங்குவதாகவும் இதன்போது குவைத் மன்னர் உறுதியளித்தார்.
இம்மாநாட்டில் இலங்கையின் சார்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் அமைச்சர்களான ஜீ.எல்.பீரிஸ், சுசில் பிரேம்ஜயந்த, பாராளுமன்ற உறுப்பினர்களான சஜின்வாஸ் குணவர்த்தனா, ஏ.எச்.எம்.அஸ்வர், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.

அட எருமை மாட்டு அரபுகளா!உதவி எங்கு போயச்சேருகிறது என்பதையும் சற்று பாருங்கள்!கோவில்களும்,சேர்ச்சுகளும்,அரசியல்வாதிகளின் ஆடம்பரத்துக்குமாக(அவர்களுக்கு தேவையானவர்கள் மூலம் கொன்றக் எடுத்து) உதவாதீர்கள் ஏழைகளுக்கும்,மக்களுக்கும் அடிப்டைத்தேவைகளான மருத்துவம்,கல்வி சுயதொழில்களுக்கு உதவுங்கள்.
ReplyDelete