Header Ads



26 ஆம் திகதியை விடுமுறை தினமாக பிரகடனப்படுத்துமாறு கோரிக்கை


(சமட்)

கொழும்பு பெரிய பள்ளிவாசலின் தீர்மானத்திற்கமைய 27ஆம் திகதி இலங்கையில் முஸ்லிம்கள் ஹஜ்ஜுப் பெருநாளை அனுஷ்டிக்கவுள்ளதால் முஸ்லிம் அரச ஊழியர்களின் நன்மை கருதி ஏற்கனவே ஹஜ்ஜுப் பெருநாளுக்கான விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள எதிர்வரும் 26ஆம் திகதியை அரச வங்கி விடுமுறை தினமாகப் பிரகடனப்படுத்துமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,

இஸ்லாமிய மாதம்  பிறையை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படுகிறது. துல்ஹஜ் மாத்துக்கான பிறைபார்க்கும்  அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை, இஸ்லாமிய  சமய பணபாட்டு அலுவல்கள் திணைக்களம் மற்றும் இதர அமைப்புக்களின் ஏகோபித்த முடிவின் பிரகாரம் முஸ்லிம்களின் தியாகப் பெருநாளான ஹஜ்ஜுப் பெருநாளை எதிர்வரும் 27ஆம் திகதி சனிக்கிழமை அனுஷ்டிப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும்,  இவ்வருட ஹஜ்ஜுப் பெருநாளுக்கான அரசாங்க பொது விடுமுறை தினமாக  எதிர்வரும் 26ம் திகதி என முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. சாதாரனமாக சனிக்கிழமை அரச ஊழியர்களுக்கு விடுமுறை தினமென்பதால் ஏற்கனவே ஹஜ்ஜுப் பெருநாளுக்கான அரச, வங்கி விடுமுறை தினமாக  அறிவிக்கப்பட்டுள்ள 26ம் திகதியை விடுமுறை தினமாகப் பிரகடனப்படுத்துமாறு அவர் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சிடம் விடுத்துள்ள கோரிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.  

இதேவேளை, முஸ்லிம் தனியார் ஊழியர்களுக்கு சனிக்கிழமை அரைநாள் விடுமுறை வழங்கப்பட வேண்டுமென முஸ்லிம் தனியார் ஊழியர்கள்  தொழில் அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. Dear Brother Aarif,

    Jazakkallahu Hairan for ur request. Another important thing is that the Sri Lanka Accountant Service Exam is also scheduled to be held on 27th October, 2012 which is our haj festival day and if it will be held as it is scheduled, then most of our Muslim graduates will miss the opportunity to sit this exam.

    So, if it is possible, Please request the Examination Department or the relevant authorities to postpone this exam to another day, so that our graduates also will get the chance to become accountants.

    May Allah shower his blessings upon U!!!!!!!

    ReplyDelete

Powered by Blogger.