கண்டி அந்தோனியார் மகளிர் கல்லூரியில் இஸ்லாமிய கலாசார விழா (படங்கள்)
(இக்பால் அலி)
பாடசாலைகள் சமூகத்தில் சிறந்த மானுட வளத்தை உருவாக்கவே உள்ளன. சிறந்த கவர்ச்சிமிக்க தரமான பாடசாலையும் சிறந்த பிள்ளைகளின் பெற்றோர்களும் இருத்தல் வேண்டும். இவை இரண்டும் சரிசமமாக இருந்தால் மாத்திரம்தான் கல்வியில் உச்ச பயனை அடையலாம். சிறந்த பெற்றோர்களாக இருப்பதற்கு நபி நாயகம் (ஸல்) அவர்களுடைய சிறந்த வாழ்க்கை முறை உண்டு. அதனை நாம் ஒவ்வாரு பெற்றோரும் பின் பற்றி நடத்தல் வேண்டும். அப்போதுதான் நாம் எதிர்பார்க்கின்ற கல்வியின் இலக்கினை அடையலாம் என்று மத்திய மாகாண முஸ்லிம் கல்விப் பிரிவின் உதவிக் கல்விப் பணிப்பாளர் என். எம். நசார் தெரிவித்தார்.
கண்டி புனித அந்தோனியார் மகளீர் பாடசாலை மாணவிகளின் முஸ்லிம் மஜ்லிஸ் அமைப்பின் ஏற்பாட்டில் இஸ்லாமிய கலாசார விழா இன்று பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
பாடசாலையின் பிரதி அதிபர் திருமதி எம். எச். மஸாஹிமா தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்திற்குப் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட மத்திய மாகாண முஸ்லிம் கல்விப் பிரிவின் உதவிக் கல்விப் பணிப்பாளர் என். எம். நசார் இங்கு இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்,,
பிள்ளைகளை சிறந்த கல்விமான்களாக உருவாக்குவதற்கு பெற்றோர்களிடத்தில் முன்மாதரியான பொருத்தப்பாடுகள் இருத்தல் வேண்டும். நபி நாயகம் (ஸல்) அவர்களிடத்தில் நல்ல குணாம்சங்கள் உள்ளன. சிறியோர்கள் முதியோரை மதித்தல் . அதேபோல் பெரியோர்கள் சிறியோரை மதித்தல் போன்ற மனிதனுடைய முழு வாழக்கைத் தத்துவமும் நபி நாயகம் ( ஸல்) அவர்களிடத்தில் உள்ளன. எனவே தரமிக்க பாடசாலையில் தங்கள் பிள்ளைகள் கல்வி கற்றுக் கொண்டிருகின்றார்கள். சிறப்புமிக்க பெற்றோர்களாக இருந்து பிள்ளைகளை வழி நடத்துவதன் மூலம் சிறந்த மாணவச் சமுதாயத்தை உருவாக்க முடியும் என்று அவர் அங்கு மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தனராக பாடசாலை அதிபர் பீ. லியனகே, கண்டி கல்வி வலய இஸ்லாம் பாடநெறி ஆசிரியர் ஆலோசகர் அஷ;nஷய்க் ஐ. எம். நிலாம் மற்றம் பாடசாலைப் பிள்ளைகளின் பெற்றோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Post a Comment