புத்தளம் பிரதேச ஒருங்கிணைப்பு கூட்டமும், பட்டதாரி பயிலுனர்க்கு நியமனமும் (படங்கள்)
(அபூ நாதில்)
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஆட்சேர்ப்பதற்கான நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் புத்தளம் பிரதேச செயலகப் பிரிவிக்குட்பட்ட பிரிவில் பட்டதாரி பயிலுனர்களுக்கான நியமனக் கடிதங்கள் இன்று வழங்கி வைக்கபட்டன. புத்தளம் செயலகப் பிரிவில் 31 பேர் பட்டதாரி பயிலுனர்களாக நியமனம் பெற்றனர்.
புத்தளம் பிரதேச செயலகத்தில் சமூக நலன்புரி சிரேஷ்ட அமைச்சர் மில்ரோய் எஸ் பெர்நாந்து தலைமையில் நியமனங்கள் வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது.
புத்தளம் நகர சபை தலைவர் கே. ஏ. பாயிஸ், வடமேல் மாகாண சபை உறுப்பினர் என். டீ. எம். தாஹிர், புத்தளம் நகர சபை மற்றும் புத்தளம் பிரதேச சபை உறுப்பினர்கள், புத்தளம் பிரதேச செயலாளர் எம். ஆர். எம். மலிக் ஆகியோர் நியமன கடிதங்களை வழங்கி வைத்தனர்.
.............................................................................................................
புத்தளம் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் கூட்டம் சமூக நலன்புரி சிரேஷ்ட அமைச்சர் மில்ரோய் எஸ் பெர்நாந்து தலைமையில் இன்று புத்தளம் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. புத்தளம் பிரதேச செயலகப் பிரிவிற்குற்பட்ட பகுதிகளில் 2012 ஆம் ஆண்டுக்காக புத்தளம் பிரதேச செயலகத்தினால் செயற்படுத்தப்பட்ட அபிவிருத்திகள் மற்றும் நடைபெற்று வருகின்ற அபிவிருத்திகள் தொடர்பாக இங்கு விளக்கமளிக்கப்பட்டது.
வடமேல் மாகாண சபை உறுப்பினர்களான என். டீ. எம் தாஹிர், சிந்தக மாயாதுன்ன,புத்தளம் நகர சபை தலைவர் கே. ஏ. பாயிஸ், புத்தளம் நகர சபை மற்றும் புத்தளம் பிரதேச சபை தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், புத்தளம் பிரதேச செயலாளர் எம். ஆர். எம். மலிக், அரச நிறுவன உயர் அதிகாரிகள், முப்படை மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகள், கிராம அதிகாரிகள், சமுர்த்தி உத்தியோகத்தர்களும் இந்த ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
Post a Comment