இலங்கையிலும் ஒபாமாவுக்கு ஆதரவு
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் களத்தில் இடம்பெற்ற மூன்றாவது நேரடி தொலைக்காட்சி விவாதத்தில் பராக் ஒபாமா வெற்றி பெற்றதாக கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அமெரிக்க தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஜனாதிபதி தேர்தல் தொடர்பான நேரடி ஒளிபரப்பு மற்றும் அதன் பின்னரான கலந்துரையாடல் நிகழ்விலேயே இந்த கருத்து வெளியிடப்பட்டது.
இந்த விவாதத்தின் போது ஜனாதிபதி பராக் ஒபாவும், மிட் ரொம்னியும் சீனா, ரஸ்யா, ஈரான், இஸ்ரேல் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் தொடர்பில் விவாத்தித்த போதிலும், இந்தியாவை பற்றி விவாத்திக்கவில்லை என்று கொழும்பில் கருத்துக்கள் வெளியிடப்பட்டன.
எவ்வாறாயினும் கடந்த 2 விவாதங்களில் போதும் ஆசிய பசுபிக் நாடுகள் தொடர்பில் விவாதங்கள் இடம்பெற்றுள்ளதுடன், சட்டவிரோத குடியேரிகள் தொடர்பிலும் விவாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஒபாவின் கருத்தக்களின் படி திறமையானவர்கள் அமெரிக்காவுக்கு உள்வாங்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பில் இடம்பெற்ற இந்த நிகழ்வின் பங்கேற்ற அரசியல் வாதிகள் ஊடகவியலாளர்களின் கருத்துக்களின் படி, அனேகரது வாக்குகளின் படி ஒபாமா வெற்றி பெற்றதாக தெரிவிக்கப்பட்டது. sfm

Post a Comment