Header Ads



முஸ்லிம் ஊடகத்துறையின் தேவையை நிறைவு செய்கிறது - முனைவர் பீ. எம். ஜமாஹீர்



(முனைவர் பீ. எம். ஜமாஹீர்)

முதுநிலை விரிவுரையாளர் - மெய்யியல் துறை
பேராதனைப் பல்லைக்கழகம்

ஜவ்னா இணையத்தளத்தின் ஈராண்டு நிறைவு குறித்து நோக்குகின்ற வேளையில் இலங்கையில் முஸ்லிம்களின் ஊடக வளர்ச்சி பற்றியும் ஆராய்ந்து பார்ப்பது பயன்தரும். அதுவே சமகாலத்  தேவை கூட.

முஸ்லிம் ஊடக நிலையைப் பொறுவத்தவரையில்  முஸ்லிம்களுடைய ஊடக வளர்ச்சி எந்தளவுக்கு வளர்ந்துள்ளது என்பதே நாம் கவனிக்க வேண்டிய விசயம். முஸ்லிம்களுடைய செய்திகளைச் சொல்வதற்கு அவர்களுக்னெ தனியான ஊடகம் இதுவரை இல்லை. ஆயினும் இலங்கையில் அங்காங்கே வெளிவரும் பத்திரிகைகள், சஞ்சிகைகள், துண்டுப் பிரசுரங்கள் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக பதிவு செய்து கொள்கின்றனர்.

தமிழ் மொழி சார் ஊடகங்கள் என்று குறிப்பிடும் போது தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் பத்திரிகை, வானொலி , தொலைக்காட்சி ஆகிய ஊடகங்கள் உயர்ந்த ஊச்ச நிலையைக் கொண்டுள்ளன. அதேபோல் இலங்கையிலும் சிங்கள மொழி சார் ஊடகத்துறை எல்லா மட்டங்களிலும் விரிந்த வளர்ச்சியடைந்துள்ள காலகட்டத்தில் அவற்றின் தேவைப்பாடுடைய முஸ்லிம்களது ஊடகமும் அதே போன்ற ஓர் உயர் எல்லையை எட்டியிருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறாகாது. இந்த ஊடக வளர்ச்சியில் நிறைந்து காணப்படும்  உத்திகளைக் கையாண்டாவது இங்கு முஸ்லிம்களுடைய ஊடக வளர்ச்சி எவ்வளவு ஓங்கியிருக்க வேண்டும். ஆனால் கூடுதலான ஊடக சங்கங்கள், பிராந்திய செய்தியாளர்கள், பொருளாதார வசதிகள் கொண்ட ஆற்றலும் திறனும் படைத்த  வாழும் முஸ்லிம் சமூகத்தில் ஊடகத்துறையை வளர்த்துக் கொள்ளவதில் தவறிவிட்டனர். தம் சமூகத்தவர்கள் சர்வதேசப் பாடசாலை நடத்துவதிலும் இறைச்சிக்கடை நடத்துவதிலும் அதிக அக்கறை காட்டுமளவுக்கு ஊடகத்தறை நடத்துவதற்கு அக்கறை காட்ட  முன்வரவில்லை.

இலங்கையில் முஸ்லிம்களுக்னெ தனியானதொரு அச்சு , இலத்திரனிய ஊடகம் இல்லாத ஏக்கம்  இன்று எல்லோர் மத்தியிலும்  இருந்து கொண்டிக்கிறது. இந்த ஏக்கத்ததை ஓரளவு தணிக்கை செய்யுமளவுக்கு வீட்டுக்கு வீடி வாசற்படி என்பது போல முஸ்லிம்கள் குறித்த செய்திகளை தகவல்களை உடனுக்குடன் வழங்குவதற்கு இணையத்தளங்கள்  பிரதேசம் பிரதேசவாரியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது வரவேற்கத்தக்க அம்சம்.  ஜவ்னா முஸ்லிம் இணையத்தளம் இந்தப் பிரதேச ரீதியிலான இணையத்தயங்களுக்கு அப்பால் ஒரு மேல்படி சென்று தரமான செய்திகளை வழங்குகின்றன. சுடச்சுட செய்திகளை வழங்கும் தேசிய பத்திரிகை போன்ற மன உணர்வையும் சுடச்சுட செய்திகளை வழங்கும் இலத்திரனிய ஊடகம் போன்ற மன உணர்வையும் எமக்கு எழச் செய்யும் வகையில் ஜவ்னா முஸ்லிம் மாற்றியமைத்துள்ளது. குறிப்பாக முஸ்லிம்களிடையே பெரும் வெற்றிடமாகக் காணப்படும் ஊடகத்துறையின் தேவையை நிறைவு செய்யக் கூடியதாக உள்ளன.

கலாநிதி எம். எஸ். எம். அனஸ் அடிக்கடி கூறும் கூற்றுக்கேற்ப இலங்கையில் பிராந்திய செய்தியாளர்கள்  என எடுத்துக் கொண்டால் ஏராளமானவர்கள் உள்ளனர். இவர்கள் யாவரும் வேறு ஊடக நிறுவனத்தில் பணிபுரியும் ஒட்டுண்ணிகளாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். முஸ்லிம்களுக்னெ ஊடக சங்கங்களும் உள்ளன. இவர்களால் ஆன பயன் ஒன்றுமில்லை. வெறுமனே முஸ்லிம்களுக்னெ தனியான தேசிய ரீதியிலான ஊடகம் அவசியம் என கோசம் மட்டும் முன்வைத்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களால் இதுவரை தினகரன், தினக்குரல், வீரகேசரி, சுடர்ஒளி ஆகிய பத்திரிகை போன்று ஒரு தேசிய பத்திரிகை ஒன்றை உருவாக்கிக் கொள்ள முடியாதவர்களாக இருந்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக இந்த தேசிய பத்திரிகைகளுக்கு தமிழ் செய்தியாளர்களை விட முஸ்லிம்களே கூடுதலாக  செய்தியாளர்களாக இருந்து கடுமையாக உழைக்கின்றார்கள் என்பதே எனது கணிப்பீடாகும். இந்த முஸ்லிம் ஊடகவியாளர்கள் சொற்ப வருமானத்திற்காய் மாடாய் உழைக்கின்றார்கள். இந்த ஊடகத்துறை மூலம் நிரந்தர வருமானம் ஈட்ட முடியாது எனக் கொண்டு  புதிதாக வரும் இளம் ஊடவியளார்கள் வெருண்டோடுகின்றனர். இந்தச் செய்திகள் நம் காதில் விழாமலும் இல்லை. தற்போது தமக்கு செய்தியாளர்கள் தேவையில்லை. தேசிய ரீதியில் தினசரி செய்திப் பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சிதான் தேவை.

அறிஞர் சித்திலெப்பை ஆரம்பித்து வைத்த முஸ்லிம் நேசன்  பத்திரிகையின் தேவை  இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை அல்லது  சமகாலத்தில் ஆரோக்கியமாதாக  முனனெடுக்கப்படவில்லை. அந்தப் பணியில் பெரும்பகுதியை ஜவ்னா முஸ்லிம் நிறைவு செய்வது பாராட்டக் கூடியது.  இன்று முஸ்லிம் சூழலில் இது மிகவும் வேண்டப்பட்ட  பணியாகும்.

எவ்வளவுதான் எமக்கொரு ஊடகம் இல்லை நாம் பேசிக் கொண்டாலும் தம் சமூகத்தின் வாசிப்புத் துறையை எடுத்துக் கொண்டால் வெறும் பூச்சியமாகவே இருந்து கொண்டிருக்கிறது. எத்தனை பேர் பத்திரிகை வாங்கிப் படிப்போர் எமது சமூத்தில் உண்டு. முதலில் எம் சமூகத்தினரிடையே வாசிப்புப் பழக்கத்தை தூண்டும் செயற்பாடுகளில் ஈடுபடுத்தப்பட வேண்டும். அப்பொழுதான் பரந்த விரிந்த அறிவு எம்மிவரிடையே ஏற்படும். சமகால  இளைஞர் யுவதிகள் சினிமா அல்லது வேறு அறிவுக்குப் புறம்பான  விடயங்களை நாடியே வாசிப்பு என்ற பழக்கத்தைக் கொண்டுள்ளனர். இந்த நிலைக்கேற்றவாறு தங்களது இணையத்தளத் தினூடாக  வாசிப்பு பழக்கத்தைத் தூண்டக் நல்ல விடயங்கள் பதிவு செய்ய வேண்டும்.

ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் அரசியல், நிகழ்வுகள், கட்டுரைகள், முஸ்லிம் உலகச் செய்திகள். மருத்துவம் குறிப்புக்கள், நேர்காணல், செய்திகள் ஆகிய அனைத்தும் நல்ல தரமுள்ளவையாக உள்ளன. உங்களது ஊடகப் பணி தொடர என்றும் என்னுடைய நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக.


No comments

Powered by Blogger.