Header Ads



சாதனை படைக்கும் யாழ் முஸ்லிம் இணையம் - மஸிஹுதீன் இனாமுல்லாஹ்


நடக்கும் அக்டோபெர் மாதம் 31 ஆம் திகதியுடன் யாழ் முஸ்லிம் இனைய தளம் இரண்டாவது அகவையை பூர்த்தி செய்கிறது, மிகவும் சக்தி வாய்ந்த தகவல் ஊடகங்களாக இணைய தளங்களும் சமூக வலை தளங்களும் மாறி வருகின்ற இந்த யுகத்தில் யாழ் முஸ்லிம் இணைய தளம் தமிழ் உலகில் தனக்கென ஒரு தனியான இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

இலங்கை முஸ்லிம்கள் குறிப்பாக புதிய இளம் தலைமுறையினர் அதிலும் உலகெங்கும் புலம் பெயர்ந்தும் ,தொழிலுக்காகவும் வாழுகின்ற நம்மவர்கள் உடனுக்குடன் நாட்டு, பிராந்திய மற்றும் சர்வதேச நிலவரங்களை தெரிந்து கொள்வதற்காக இணைய உலகில் பிரவேசிக்கின்றமை ஒன்றும் புதிய செய்தியல்ல!

அந்த வகையில் உலகெங்கும் சென்று வாழும் நமது சகோதர சகோதரிகள் இலங்கையிலிருந்து வெளியிடப்படுகின்ற தேசிய அளவிலான செய்தித் தளங்களையும், பிராந்திய மற்றும் சமூக மட்டத்திலான பல்வேறு இணைய தளங்களையும் தர்சிப்பதில் கூடுதல் அக்கறை காட்டுகின்றனர். அவ்வாறு இலங்கை முஸ்லிம்கள் மாத்திரமன்றி, தமிழ் மக்களும் பார்க்கின்ற தகவல் மற்றும் ஆய்வுத் தளமாக யாழ் முஸ்லிம் மாறியுள்ளமை பாராட்டுக்குரிய விடயமாகும்.

கடந்த இரண்டு வருடங்களிலும் சுமார் ஐம்பது இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த இணைய தளத்தை தரிசித்திருக்கின்றார்கள், சர்வதேச தரப்படுத்தலில் முதன்மையான தமிழ் இணைய தளங்களில் ஒன்றாக யாழ் முஸ்லிம் இடம் பிடித்துள்ளது.

இலங்கையில் பல்வேறு ஊடகங்களிலும் வெளிவரும் முக்கிய தலைப்புச் செய்திகள், ஆய்வுகள் உற்பட, சமூக ஊடகங்களில் வெளிவரும் முக்கிய செய்திகள் ஆய்வுகள், ஆசிரியர் தலைப்புக்கள் , தேசிய, சர்வதேச, பிராந்திய மற்றும் சமூக விவகாரங்கள், ஊர்ப் புதினங்கள என பல்சுவை அமசங்களை ஒரே தளத்தில் பார்த்துக் கொள்ள குறிப்பாக வெளி நாடுகளில் வாழும் தமிழ் பேசும் மக்கள் யாழ் முஸ்லிம் இணைய தளத்தை நாடுகின்றனர்.

யாழ் இணையம் வெறும் புதினத் தகவல் தளமொன்றிற்கு அப்பால் இலங்கை வாழ் சிறுபான்மை சமூகங்களின் இலட்சியக் குரலாக, உரிமைக் குரலாக, இனங்களுக்கிடையில் நிரந்தர சமாதான சகவாழ்வு நிலவ வேண்டும் என விரும்புகின்ற சக்திகளின் ஊடகமாக செயற்படுவது அதன் தனித்த் தன்மைக்கு மிகவும் சிறந்த அடையாளமாக இருக்கிறது.

யாழ் முஸ்லிம் இணைய தளம் மிகவும் சிறந்த ஊடக தர்மத்தை கைக்கொள்வதால் எந்தவொரு தனி நபரினதும், குழுவினதும் ஊது குழலாக அல்லாத மட்ட ரகமான சாக்கடை அரசியலின் காலமாக தொளிற்படாமை மாத்திரமன்றி சகல தரப்பினரதும் கருத்துக்களை வெளிக்கொணர்வதில் அது செய்கின்ற பங்களிப்பு கட்சி இயக்க வேறுபாடுகளுக்கப்பால் அதன் செல்வாக்கை வளரச் செய்துள்ளது எனலாம்.

யாழ் இணையம் காத்திரமான தனது சேவையை இணைய உலகில் இன்னும் சிறப்பாக செய்ய எனது வாழ்த்துக்கள்...!

No comments

Powered by Blogger.