என்னை நம்புங்கள், நானும் உங்களை நம்புகிறேன் - ஜனாதிபதி மஹிந்த
TN
இன ரீதியான குறுகிய அரசியல் நோக்கங்கள் இனியும் வேண்டாம். அனைவரும் ஒன்றிணைந்து கிழக்கைக் கட்டியெழுப்புவோம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று மட்டக்களப்பில் தெரிவித்தார். மட்டக்களப்பு வெபர் அரங்கில் நேற்று பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் உரையாற்றிய அவர், இன, மத, ரீதியாக மக்களைப் பேதப்படுத்த சிலர் முயற்சிப்பதாகவும், மக்கள் அதற்கு ஒருபோதும் இடமளிக்கக் கூடாதெனவும் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபையில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர்களை ஆதரிக்கும் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் மட்டக்களப்பு வெபர் அரங்கில் நடைபெற்றது. அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த, பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் உட்பட அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், வேட்பாளர்கள் பலரும் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில்,
கிழக்கு மாகாணத்துக்கு விஜயம் செய்து உங்களைச் சந்திப்பதில் நான் பெருமகிழ்ச்சியடைகின்றேன். உங்கள் பாசத்தையும் நேசத்தையும் நான் நன்கறிவேன். நீண்ட காலமாக நீங்களும் உங்கள் பிள்ளைகளும் பட்ட கஷ்டங்கள், துயரங்களை நான் நன்கு அறிவேன். இனி நீங்கள் பயம், சந்தேகமின்றி நிம்மதியாக வாழ முடியும். அதற்கான சூழலை நாம் தற்போது ஏற்படுத்தியுள்ளோம்.
முப்பது வருடங்கள் பின்னடைவு கண்ட இப்பிரதேசத்தின் அபிவிருத்தியில் நாம் தற்போது மிகுந்த அக்கறையுடன் செயற்படுகிறோம். கிழக்கின் உதயம் மூலம் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் கிழக்கில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எதிர்காலத்திலும் நாம் இதனைத் தொடர்வோம். கிழக்கில் வாழும் மக்கள் அன்றும் இன்றும் எமது சகோதரர்கள் போன்று பழகுபவர்கள். இந்த வகையில் இந்த நாட்டில் நாம் அனைவரும் ஒரு தாயின் மக்களே. இன, மத, குல, பிரதேச பேதங்கள் எம்மத்தியில் இருக்க முடியாது. நாங்கள் அனைவரும் அன்று போல் என்றும் வாழ வேண்டும். அதுவே எமது பெரும் விருப்பம்.
சிங்களம், தமிழ், முஸ்லிம் என்ற இனரீதியான குறுகிய அரசியல் நோக்கங்கள் இனியும் வேண்டாம். அதற்கு இனி இடமில்லை. சிலர் இன பேதம், மத பேதத்திற்குத் தூபமிடுகிறார்கள். எந்த நிலையிலும் எமது சகோதர பாசம் அன்றுபோல் என்றும் உறுதியாக இருக்கும். அன்று பட்டதாரிகளின் கைகளிலும் துப்பாக்கியே இருந்தது. இப்போது சிறந்த தொழில் வாய்ப்பில் அவர்கள் ஈடுபட வழி அமைக்கப்பட்டுள்ளது. எதிர்காலம் பற்றிய நம்பிக்கை அன்று இருக்கவில்லை. எனினும் இன்று அந்த நம்பிக்கையை நாம் உருவாக்கியுள்ளோம்.
இனவாத அரசியல் இனி எமக்குத் தேவையில்லை. இனி சகோதரத்துவத்துடனான பாசமே அவசியம். கிழக்கு மாகாணம் மிக வேகமாக முன்னேறி வருகிறது. அதற்காக நாம் பல பில்லியன் ரூபா நிதியினை செலவளித்துள்ளோம். இன்னும் இன்னும் தொடர்ந்தும் உங்கள் வசதிகளை மேம்படுத்துவோம்.
கிழக்கின் கிராமங்கள் அபிவிருத்தி செய்யப்படும். அதேபோன்று கிராமிய பாதைகள், மின்சாரம் உள்ளிட்ட சகல வசதிகளையும் நாம் விரைவில் பெற்றுக் கொடுப்போம். மாகாண சபைகள் மூலம் அதனை நாம் பெற்றுக்கொடுப்போம், மாகாண சபைகள் மூலம் இதனை நாம் பெற்றுக்கொடுப்போம் என உறுதி யாகக் கூறுகின்றேன். இதனை எவரும் இல்லாமல் செய்ய முடியாது.
தற்போது இங்கு உல்லாசப் பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. அதனால் தொழில்வாய்ப்புகளும் உருவாகி வருகின் றன. பாசிக்குடா போன்ற அழகான பிர தேசங்கள் கிழக்கிற்குப் பெருமை சேர்க்கின் றன. இதன்மூலம் இளைஞர்களுக்குத் தொழில்வாய்ப்புகளும் கிட்டுகின்றன.
கல்லடி பாலம், சர்வதேச விளையாட்ட ரங்கு என பல அபிவிருத்திகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பள்ளிவாசல்கள், கோவில்கள், விகாரைகள் என்றில்லாமல் அனைத்தையும் ஒன்றுபோல் நாம் பாதுகாப்போம். கிழக்கின் உதயம் உங்கள் உதயம். உங்கள் எதிர்காலத்தின் உதயம். எத்தகைய தீர்மானத்தை எடுத்தாலும் புத்தியுடன் அதனை மேற்கொள்ளுங்கள்.
உங்களுக்குச் சேவை செய்யக்கூடியவர்களையே நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். இதுவே உங்களுக்கும் எங்களுக்கும் வசதியாக அமையும். வெற்றிலையின் வெற்றி உங்கள் வெற்றி. உங்கள் எதிர்காலத்தின் வெற்றி. நான் உங்கள் நண்பன். என்னை நம்புங்கள். நானும் உங்களை நம்புகிறேன். மறவாது வெற்றிலைக்கு வாக்களியுங்கள். நாம் அனைவரும் இணைந்து இளைய சந்ததிக்காக சிறந்தொரு நாட்டைக் கட்டியெழுப்புவோம்.

நம்பி நம்பிதானே கூடஇருந்து குழி பறிக்கிறீர்கள் .இன வெறி கருத்துகளை கட்டுப்படுத்த தெரியாத ஜனாதிபதியான
ReplyDeleteதன்னை நம்பட்டாம்.முட்டாள் பய புள்ள.