Header Ads



காத்தான்குடியில் மஹிந்த ராஜபக்ஸ (படங்கள் இணைப்பு)

பர்ஹான்
 
மட்டக்களப்பு மாவட்டத்துக்கு இன்று  விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மட்டு-கல்முனை காத்தான்குடி பிரதான வீதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இலங்கையின் 4 ஆவது சுரங்கப்பாதையை அங்குரார்ப்பணம் செய்து வைத்ததோடு அதைத்தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்திலும் கலந்து கொண்டர்.
 
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சருமாண எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ,சிரேஷ்ட அமைச்சர் பௌசி மற்றும் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் ,கிழக்கு மாகாண சபை மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்கள், பெரும் திரளான பொது மக்கள்,பாடசாலை மாணவிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
 
இலங்கையில் குறிப்பாக கொழும்பு ,பொரளை ,கண்டி ,குருநாகல்,காத்தான்குடி ஆகிய பிரதேசங்களில் மாத்திரம் சுரங்கப்பாதை நிறுவப்பட்டுள்ளது. இங்கு அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்ட சுரங்கப்பாதை கிழக்கு மாகாணத்தின் முதலாவது சுரங்கப்பாதை என்பது குறிப்பிடத்தக்கது.
 







 

No comments

Powered by Blogger.