வாக்குறுதியை காப்பாற்றிய மஹிந்தவும், நஜீப் ஏ. மஜீத் கிழக்கு முதலமைச்சரானதன் பின்னணியும்
நஜீப் ஏ. மஜீதுக்கு முதலமைச்சர் பதவியை வழங்கும் தீர்மானத்தை ஜனாதிபதி முன்பே எடுத்திருந்தார் தமது கட்சி வெற்றி பெற்றால் கிழக்கு மாகாணத்தின் முதலாவது முஸ்லிம் முதலமைச்சராக நஜீப் ஏ. மஜீத்தை நியமிப்பது என்ற தீர்மானத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேர்தலுக்கு முன்பே தீர்மானித்திருந்தார். இதன் ஓர் எதிரொலியே கிழக்கு மாகாண சபையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினராக இருந்த மௌலவி ஹஸனுக்கு கட்சி இம்முறை நியமனப்பத்திரம் வழங்காமையாகும்.
ஐ.ம.சு. கூட்டமைப்பில் திருமலை மாவட்ட பட்டியலை அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையிலான நியமனக்குழு பூரணப்படுத்தியிருந்த போது நஜீப் ஏ. மஜீதின் பெயர் இடம் பெற்றிருக்கவில்லை.
அமைச்சர் றிஷாத் பதியுதீன் நஜீப் ஏ. மஜீதின் நெருங்கிய நண்பரான காணி அமைச்சர் ஜனக தென்னகோனின் இணைப்புச் செயலாளர் நஸாரும் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்.
நஜீபின் பெயர் இடம் பெறாதது குறித்து ஜனாதிபதி கடுந் தொனியில் அமைச்சரிடம் கேட்டுள்ளார். நஜீப் கட்டாயம் போட்டியிட வேண்டும் எவர் பெயரை வெட்டியாவது நஜீப் பெயரை உட்படுத்துமாறு பணிப்புரை வழங்கியுள்ளார்.
ஜனாதிபதி நஜீப் ஏ. மஜீதுக்கு நியமனக் கடிதத்தைக் கையளிக்கும் போது முதலமைச்சர் எனக்கூறி வெற்றி பெற்று வாருங்கள் என்று ஆசிர்வதித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்துக்கு கிண்ணியா சென்ற பொழுது நஜீப்பின் வீட்டிற்குச் சென்று அவரது தாயாருடன் உரையாடி உங்கள் மகனுக்கு உயர் பதவி வழங்குவேன் என்றும் தெரிவித்திருந்தார். அங்கு ஜனாதிபதி கிண்ணியா தொதலையும் ருசி பார்த்து விட்டே சென்றார்.
.............................................................................................................................................
முதலமைச்சர் பட்டியலிலிருந்து நஜீபின் பெயரையே மு.கா. தெரிவு செய்தது
முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐ.மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் நியமிக்கப்பட்ட உயர் மட்டக்குழுவைச் சந்தித்த போது கிழக்கு முதலமைச்சராக நியமிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்த பட்டியல் வாசித்து காட்டப்பட்டது. இவர்களில் நீங்கள் யாரை விரும்புகின்றீர்கள் என வினவப்பட்டுள்ளது. அமீர் அலி, உதுமாலெப்பை சிவநேசத்துரை சந்திரகாந்தன், நஜீப் ஏ. மஜீத் ஆகியோரது பெயர்கள் அந்தப் பட்டியலில் இருந்தது.
இந்தப் பட்டியலிலுள்ள நஜீப் ஏ. மஜீதின் பெயரையே நாம் தெரிவு செய்தோம் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம். அஸ்லம் தெரிவித்தார். Navamani

The fact is that SLMC this time wanted
ReplyDeleteto give CM to a Muslim.....So, Pillayan was Out
not to give to Rishad's Party......So, Ameer Ali was Out
not to give to Athaullah's party.....So, Uthumalebbe was Out
Further, Hackeem did not like the CM coming from SLMC too since the CM (whoever) may become a threat to his leadership in future. Therefore, the one and only one option was Najeeb A.Majeed and hence he was appointed; nothing else.