Header Ads



கற்பிட்டியில் வரலாறு காணாத ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு)

M.B.முஹம்மட் அர்ஷத்

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அமெரிக்காவின் இஸ்லாமிய விரோத செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கற்பிட்டி அனைத்து ஜும்மா பள்ளிவாசல்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில்  இன்றைய ஜும்மா தொழுகையின் பின்னர் மாபெரும் கண்டன பேரணியும் ஆர்ப்பாட்டமும் இடம் பெற்றது. கற்பிட்டி பிரதேச செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது அமெரிக்க அதிபர் பரக் ஒபாமாவின் கொடும்பாவியும் தீயிடப்பட்டது.  இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இதுவே கற்பிட்டி வரலாற்றில் இடம்பெற்ற மிகப்பெரிய ஆர்ப்பாட்டமாகும். இதற்காக பொலிசாரும் பூரண ஒத்துழைப்பு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.





No comments

Powered by Blogger.