அதிகம் சொக்கலேட் சாப்பிட்டால் போதைக்கு அடிமையாகி விடுவார்களாம்..!
அதிக அளவில் சாக்லேட் விரும்பி சாப்பிடுபவர்களுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. ஏனெனில் அவர்கள் போதை மருந்துக்கு அடிமையானவர்களாக மாறி விடும் அபாயம் உள்ளது. அதுவும் “ஒபியம்” என்ற போதை மருந்து சாப்பிட்டவர் போன்று ஆகி விடுவர்.
இந்த தகவலை மிசிகன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மூளையில் என்கெப்லின் என்ற ரசாயன திரவம் உள்ளது. சாக்லேட் அதிகம் சாப்பிடும் போது அது 2 மடங்கு சுரக்க தொடங்குகிறது. பின்னர் உணர்வு நரம்புகளை செயல் இழக்க செய்து போதையை உண்டாக்குகிறது. “ஓபியம்” போதை பொருளில் “லன்டோர்பின்” என்ற ரசாயன பொருள் சாப்பிடுபவர்களின் உடலில் இதே நிலையை தான் ஏற்படுத்துகிறது.
எனவே, தான் அதிக அளவில் சாக்லேட் சாப்பிடுபவர்கள் ஓபியம் போன்ற பொருள் சாப்பிட்டு ஏற்படும் போதையை அனுபவிப்பார்கள் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எலிகளுக்கு அதிக அளவு சாக்லேட் கொடுத்து ஆய்வின் மூலம் இதை உறுதி செய்துள்ளனர்.

Post a Comment