Header Ads



பர்தாவை அகற்றச்சொன்ன பொலிஸாரின் கையைக் கடித்த பெண் - பிரான்சில் சம்பவம்


பிரான்சில், முகத்திரையை அகற்றச் சொன்ன, பெண் போலீசைக் கடித்த, முஸ்லிம் பெண்ணுக்கு, இரண்டு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

பிரான்சில், மெர்செல் நகரைச் சேர்ந்தவர், லூயி மேரி சூசி, 18. முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த இவர், ஜூலை மாதம், கறுப்பு அங்கியால், உடல் முழுவதையும் மறைத்தபடி, மசூதிக்கு செல்ல முயன்றார். பிரான்ஸ் சட்டப்படி, உடல் மற்றும் முகத்தை மூடியபடி பொது இடத்தில் செல்வது குற்றம்.

கோபம்: எனவே, இரண்டு பெண் போலீசார், லூயியை வழிமறித்து, அவரது அடையாள அட்டை மற்றும் ஆவணங்களைக் காட்டும்படி கூறினர்; முகத்திரையையும் அகற்றும்படி உத்தரவிட்டனர். அவர்கள் சொன்னதை கேட்காமல், லூயி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில், கோபத்தின் உச்சிக்குச் சென்ற லூயி, பெண் போலீஸ் ஒருவர் மீது பாய்ந்து, திடீரென கடித்து விட்டார்.

தண்டனை: இது தொடர்பான வழக்கு, கோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது, போலீசை கடித்ததை, ஒப்புக் கொண்டார் லூயி. இதையடுத்து, அவருக்கு இரண்டு மாத சிறைத் தண்டனை விதித்து, நீதிபதி உத்தரவிட்டார். பிரான்சில், "முகத்தையும், உடலையும் மூடிக் கொண்டு, பொது இடத்திற்கு வருவது குற்றம்' என, 2011ல் சட்டம் கொண்டு வரப்பட்டது. மீறினால், இந்திய மதிப்பில், 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். பொது இடத்தில் எப்படி நடந்து கொள்வது என்பது குறித்து, வழக்கில் சிக்குவோர், கட்டாயப் பயிற்சி பெற வேண்டும். இதற்கு, பிரான்ஸ் முஸ்லிம்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும், சட்டம் தொடர்ந்து அமலில் உள்ளது.

5 comments:

  1. எந்த நாட்டில் வாழ்கிறோமோ அந்த நாட்டு சட்டத்திற்கு கட்டுப்பட சொல்லித்தான் மார்க்கம் சொல்கிறது.முகத்தை காட்டி தன்னை அடையாளப்படுத்தி இஸ்லாத்தினதும்,தன்னுடையதும் கௌரவத்தை காப்பாற்றியிருக்கலாம்

    ReplyDelete
  2. வாழும் நாட்டின் சட்டத்திற்கு கட்டுப்பட வேண்டும் என்பது மார்க்கம் என்கிறீர்கள் அபு மீரான் அதில் எனக்கு உடன்பாடு இல்லை ஆதாரத்துடன் கொஞ்சம் விளக்கவும்.முஸ்ரிக்குகளின் நாட்டில் வாழும்போது நிர்ப்பந்தமான நிலை ஏற்பட்டால் வேறுவழி இல்லை.மற்றும் நியயமானவற்றுக்கு கட்டுபடலாம் மார்க்க விரோத நடவடிக்கைக்கு எப்படி கட்டுபடுவது...

    ReplyDelete
  3. அபாயா போடா அனுமதியுண்டு.முகத்தை மூடக் கூடாது.பெண் போலீசிடம் முகத்தை காட்டுவதில் என்ன தவறு.
    மார்க்கத்துக்கு விரோதமாக நடக்கச் சொன்னால் ஹிஜ்ரத் செய்து பரந்த பூமியில் வேறு இடங்களை தெரிவு செய்து வாழத்தான் அல்லாஹ் திருமறையில் அருளியிருக்கிறான்.எந்த சூராஹ் என்று தெரியாது.இந்த சிறிய விடயத்தை
    பெரிது படுத்தி நம்மை கேவலப்படுத்துவார்கள் அதற்காக அப்படி எழுதினேன்

    ReplyDelete
  4. அபு மீரான் அவர்களே உங்களிடமிருந்து இக்கருத்தா?என ஆச்சரியமாக இருக்கிறது,எந்த நாட்டில் வாழ்கிறோமோ அந்நாடடின் சட்டத்துக்கு கட்டுப்படுவதில் பிழை இல்லை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை அது எது வரைக்கும் என்றால் இஸ்லாமிய சட்டத்துக்கு உட்பட்டதாக இருக்கும் வரை தான்,இங்கு ஒரு விடயத்தை ஞாபகப்படுத்த கடமைப்பட்டுள்ளேன்,அதாவது முகத்தை மூடுவதிலிருந்து பிரான்ஸ் முஸ்லிம்கள் தடுக்கப்பட்டிருந்தால் அதை தவிர்க்கலாம் (இஸ்லாம் சொல்வது ”உங்கள் முக்காடுகளால் நெஞ்சை மறைத்துக்கொள்வது”) முகத்தை மூடி யார் என்று அடையாலம் காணமுடியாத படி முகத்தை மறைப்பதால் தற்போது பல பிரச்சினைகள் நடந்தேரியுள்ளதால் தான் இப்பிரச்சினை தோன்றியது என்பதை நாம் தெரிந்து கொள்ளனும் அழகான முறையில் தலையையும்,அதே ஹிஜாப்பால்(முந்தானையால்) நெஞ்சுப்பகுதியையும் மறைத்தால் போதுமானது இப்படி செய்யும் போது தடுப்பதற்கு எவ்வித காரணமும் யாராலும் சொல்ல முடியாது ஆனாலும் இதுவரை முகத்தை மூடி முஸ்லிம்கள் நடந்தமையால், சில குற்றச்செயல்கள் புரிபவர்கள் இதனைப்பயன்படுத்திக் கொண்டமை தான் இப்படியொரு நிலைமைக்கு மாற்று மதத்தவர்கள் வந்தார்கள் என்பது தான் சரியானது இதன் பிறகாவது கட்டாயப்படுத்தி முகத்தை மூடவைக்கும் கணவர்களும்,தந்தைகளும் திருந்துங்கள்.இஸ்லாத்தை இஸ்லாத்தில் உள்ளவைகளைக்கொண்டு அறிவுறுத்துங்கள் எக்காலத்திலும் (இது போன்ற)எவ்வித பிறச்சினைகளுக்கும் முகம் கொடுக்க தேவையில்லை.

    ReplyDelete
  5. Alhas முகம் மூடுவதை நியாப்படுத்தவில்லைஎனக்கு உடன்பாடு இல்லை .அதை சினிமா விபச்சாரிகளும்,இலங்கையிலிருந்து ஐரோப்பா,அமெரிக்கா
    நாடுகளுக்கு அந்நிய மதத்தவர்களை புலிகளாகவும் இருக்கலாம் (அதற்காக நம்மவர்களை கடத்துவது சரியென்று சொல்லவில்லை) காசுக்காக தனது மனைவி,குழந்தைகளின் பாஸ்போட்டில் முகம் மூடிய அபாயாக்கள் மூலம் கடத்தி,
    வெற்றி அடைந்தவுடன் அல்லாஹ்வுக்கு லஞ்சம் கொடுப்பதற்கு உம்ராவுக்கு செல்கிறார்கள்.சிலர் தான தருமங்கள்
    செய்கிறார்கள்.இன்னும் பலர் முகம் மூடி முறைகேடாகவும் துஸ்பிரயோகம் செய்கிறார்கள்.மார்க்கத்தில் இல்லாதவைகளை
    சொல்லி சொல்லியே தங்கள் வயிறை வளர்த்து மக்களையும் வழி கெடுக்கிறார்கள். தனது குடு வியாபாரம் செளிப்பதட்கு ஒரு அமைப்பிற்கு வேன் ஒன்றையே அன்பளிப்பாக(கொடுத்தவரை பார்த்தால் இவரா அந்த வியாபாரி என்று நினைப்பார்கள்) வழங்கியதை இன்றும் கிலாகித்து பெருமை பேசும் நம் சமூகம் அல்லாஹ்வின் உதவி இல்லையே என்று கவலைப்படுகிறது இது 1999 இல் நடந்ததது

    ReplyDelete

Powered by Blogger.