Header Ads



பிரிட்டனிலிருந்து மற்றுமொரு தொகுதி இலங்கையர்கள் நாடு கடத்தப்படுகின்றனர்

TN

பிரிட்டனிலிருந்து அகதி அந்தஸ்துக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்கள் ஒரு தொகுதி இலங்கை யர்கள் எதிர்வரும் செப் டெம்பர் 19ம் திகதி ஜிvt030 என்ற விசேட விமானத்தில் கொழும்புக்கு அனுப்பப்படவுள்ளனர்.
 
இந்த விமானம் பிரிட்டனிலிருந்து 19ம் திகதி பிற்பகல் 3.30 மணிக்கு புறப்படுகின்றது.
 
இவ்விதம் அகதி தஞ்சம் நிராகரிக் கப்பட்டவர்கள் கையொப்பமிடச் செல் லும் வேளை அவர்கள் தடுத்து வைக்கப் பட்டு அவர்களுக்கான விமானச் சீட் டுக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்விதம் எதிர்வரும் பதினெட்டாம் திகதி வரை இந்த சீட்டுக்களை குடிவரவு குடியகல்வு அமைச்சினால் வழங்கப்படுமென தெரிவிக்கப்படுகின்றது.
 
இதில் ஒரேயொரு நபருக்கான டிக்கெட் சட்டத்தரணி வாசுகிக்கு அனுப் பியுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார். தனி விமானம் என்கின்ற போது அதில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் அனுப்பப்பட வாய்ப்புள்ளதாக நம்பப்படுகின்றது.  இவ்விதம் அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டவர்கள் உங்கள் சட்டத்தரணிகளை தொடர்பு கொண்டு அதற்கான ஆக்கபூர்வமான விடயங்களை மேற்கொள்ளும்படி சமூக நலன்விரும்பிகள் வேண்டியுள்ளனர் எனவும் தெரிய வந்துள்ளது.

No comments

Powered by Blogger.