Header Ads



சவூதி அரேபியாவுக்கு ஏற்படப்போகும் பரிதாபம்..?

 
சவூதிக்கே பெட்ரோலா என்ற கேள்வி கடலுக்கே உப்பா? என்பது போன்று அதீத முரணாகத் தற்போது தோன்றுகிறது. ஆனால், சவூதியில் ஆண்டொன்றுக்கு 8 சதவீதம் என்ற அளவில் அதிகரித்துவரும் மின் தேவை தொடர்ந்தால்,

2030 ஆம் ஆண்டுவாக்கில்  அந்நாடு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நிலைக்குத் தள்ளப்படும் என்று சிட்டி குழுமத்தின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

தற்போது,  உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடாகத் திகழும் சவூதி அரேபியா,மொத்த எண்ணெய் உற்பத்தியில் 25 சதவிகிதத்தை தானே பயன்படுத்தி வருகிறது. அந்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் 50 சதவிகிதம் எண்ணெய் மற்றும் அதிலிருந்து கிடைக்கும் பொருட்களை கொண்டு உற்பத்தி செய்யப்படுகின்றன. சவூதி அரேபியாவில் மின்தேவை ஆண்டுக்கு 8 சதவிகிதம் அதிகரித்து வருகிறது. இந்நிலை தொடர்ந்தால், 2030ம் ஆண்டில் அந்நாடு எண்ணெய் ஏற்றுமதியாளர் என்ற நிலையை இழந்து இறக்குமதியாளராக மாறக்கூடும் என்கிறது அந்த ஆய்வறிக்கை.inneram

No comments

Powered by Blogger.