மன்னார் மரைக்கார் தீவில் முஸ்லிம் குடியிருப்புகளுக்கு தீ வைப்பு
இர்ஷாத் றஹ்மத்துல்லா
மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மறிச்சுக்கட்டி மரைக்கார் தீவு பிரதேசத்திலுள்ள முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்ற கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கொட்டில்கள், மற்றும் பொதுக் கட்டிடம் என்பனவற்றின் மீது நேற்று திங்கட்கிழமை இரவு தீவைப்பு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இதன் போது 7 தற்காலிக கொட்டில்களும்,ஒரு பொது நோக்கு மண்டபமும் தீயில் எரிந்து சாம்பராகியுள்ளது.
நேற்று இரவு 9.00 மணியளவில் இ்க்கிராமத்துக்குள் புகுந்த ஆயுதம் தறித்த கும்பல் சம்பவத்தை செய்ததாக அம்மக்கள் தெரிவித்தனர். இரவு வேளையில் வந்த ஆயுத தாரிகள் பல கொட்டில்களை அகற்றி வாகனத்தில் ஏற்றியதாகவும்,பி்ன்னார் குடிசைகள் சிலவற்றிக்கு தீ வைத்துமுள்ளனர்.
தீ வைப்பு சம்பவம் இடம் பெற்ற போது ஆயுததாரிகளிடம் அதனை செய்ய வேண்டாம் என்றும், தாங்கள் குடிப்பதற்கு வைக்கப்பட்டுள்ள தண்ணீரையாவது எடுத்துக் கொள்வதற்கான அனுமதியினை தாருங்கள் என்று மன்றாட்டமாக கேட்ட போது ஆயுததாரிகள் அனுமதியளிக்கவில்லை என மக்கள் தெரிவித்தனர்.
அதே வேளை தீ வைப்பு சம்பவம் இடம் பெற்றினைதையடுத்து அப்பிரதேச மக்கள் இரவினை கழிப்பதற்கு கூட நாதியற்ற நிலையில் இருந்ததாக வயோதிபர் ஒருவர் தெரிவித்தார்.
தற்போது இக்கிராமத்துக்கு பொலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிலாவத்துறை காவற்துறையினர் தெரிவித்தனர்.இந்த சம்பவம் குறித்து கேள்வியுற்றதும்,அமைச்சர் றிசாத் பதியுதீன்,பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் ஆகியோர் இந்த சம்பவத்தை கண்டித்துள்ளதுடன்,பாதிக்கப்பட்டுள்ள மக்களுடன் உடன் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கையினை எடுத்துவருவதாக தெரியவருகின்றது.

This comment has been removed by the author.
ReplyDeleteithai seithathu yaar? makkalukku therium
ReplyDeleteaaitham konndu weliyetra ippothu yaaral mudium risath avakaley?
அரசின் பூரன கட்டுபாட்டில் உள்ள ஒரு இடதில் பொலிசுக்கு தெரியாமல் இந்த காரியம் செய்தது யார்? பள்ளி உடைப்பவர்கள் கைது செய்யப்படாமல் இருப்பது போல் இதில் சம்பந்தபட்டவர்களும் தப்பி விடுவார்களோ?
ReplyDeleteயாரும் பயப்படாதீர்கள். இழந்த உயிர்களைத் தவிர மற்ற எல்லாவற்றையும் மகிந்தவைக் கொண்டு பெற்றுக் கொள்ளலாம் என்று அமைச்சர் றிசாத் சொல்லியிருக்கின்றார். இந்த அரசாங்கத்தில்தான் முஸ்லிம்கள் அச்சமின்றி வாழ்கின்றார்கள் என்று அதாஉல்லா சொல்லியிருக்கின்றார். அஸ்வர், ஹிஸ்புல்லா மற்றுமுள்ள அமைச்சர்கள் எல்லாம் அரசு முஸ்லிம் மக்கள் மீது மிகவும் அன்பு கொண்டிருப்பதாகச் சொல்கின்றார்கள். அதைரியப் படாதீர்கள். எல்லாவற்றையும் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். கஷ்ட்டத்தை மட்டும் நாங்கள் பட்டுக் கொள்வோம்.
ReplyDeleteகடற்படையினரே மேற்படி தீ வைப்பில் ஈடுபட்டதாக அறிய முடிகின்றது. வேட்டைப் பிராணி ஆக்கப் பட்டுள்ளனரா முஸ்லிம்கள்?
ReplyDelete